*
NA.GA.THURAIVAN'S HAIKU.
*
ஆகம விதிகளாலானது
ஆன்ம லயம்
நிறைந்தது
பக்தர்கள்
தரசிக்கும் ஆலயம்.
*
அதிர்வலைகளின்
சுழல் வட்டம்
எங்கும்
பரவி, மேனியை
சிலிர்க்க
வைக்கிறது பிராணசக்தி.
*
பஞ்ச பூதங்களுக்கு
நடக்கும்
பூசையைத்
தரிசிக்கிறார்கள்
பஞ்ச பூதங்களாலான
மனிதர்கள்.
*
உள்ளே நுழைந்ததும்
மௌனமாக்கி
விடுகிறது
மந்திரங்களின்
ஒலி.
*
எங்கிருந்து
வருகிறது?
பரபஞ்ச மந்திரம்
“ ஓம் ”
கார ஓலி.
*
ஊன் உடம்பு
ஆலயம்
நாதன் உள்ளிருக்கிறான்
நம்மை நாமே தரிசிக்கலாம்.
*
சூன்யத்திலிருந்து
இறங்கிய
பிகாசமான
சூன்யம்
நிரம்பியதே
மூலஸ்தானம்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக