*
தமிழ்நாட்டில்
இலக்கியக் கூட்டங்கள் பெரும்பாலும் சனி, ஞாயிறு காலை அல்லது மாலை வேளைகளில் தான் நடைபெறுகின்றன..
ஏனென்றால் அவ்விரு நாட்களும் விடுமுறை திமழைனம் என்பதேயாகும். அன்று ஒய்வாக இலக்கியப்
பேச்சாளர்கள், படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொள்வதற்கு
வசதியாக அமைகின்றன. இலக்கியக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட சின்ன
அரங்க அறைக்கு வந்து தேவையான அறை அலங்கரிப்புகள், மேசை நாற்காலிகள் வரிசைப்படுத்தி வைப்பது, குடிநீர்
மற்றும் தேனீர் டிரம் வைப்பதற்கான இடம் தேர்வு
செய்து வைப்பது, மைக்செட் அமைப்பது, பேச்சாளர்கள் பேசுவதற்கான ஸ்டேண்ட் அமைப்பது, முன்வாசலில்
உள்ளே வருபவர்களை வரவேற்று, போய் அமருங்கள் என முகமலர்ச்சியோடு பேசி மகிழ்வது, விற்பனைக்கு
வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் வரிசைப்படுத்தி வைப்பது, அதனருகில் வந்து நிற்கும் நண்பர்களிடத்தில்
நலம் விசாரித்து புதியதாக வந்துள்ள புத்தகம் பற்றி பேசுவது என பல்வேறு காரியங்களை ஒருங்கிணைப்போடு
கவனித்து வருவார்கள். வருகை தருபவர்கள் உள்ளே நுழைந்து காலியாக இருக்கும் இருக்கைளில்
போய் அமர்ந்துக் கொள்வார்கள். கூட்டம் எப்போது தொடங்கும் என்ற ஆவல் பலரின் மனங்களில்
ஓடும். கூட்ட ஏற்பட்டாளர்கள் கூட்டத்தைத் தொடங்கலாமென நினைக்கும் போது பார்த்து வெளியே
மெல்ல சின்னச் சின்னத் தூறல்கள் விழத்தொடங்கும். “ அட, மழைத்தூறல் போட ஆரம்பித்து விட்டதே
” – என்று கவலைப்படுவார்கள். யாரேனும் ஒருவர் வந்து வெளியில் பார்த்துவிட்டு, பலமா
வராது, லேசான தூறல்தான் கூட்டத்தை ஆரம்பியுங்க… ” என்பார். கூட்டம் ஆரம்பித்து பேசத்
தொடங்குவார்கள். வருபவர்கள் வந்துக்கொண்டிருப்பார்கள். பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அந்தக் கூட்டத்தில் மழையும் வந்துக் கலந்துக் கொள்ளும் என்று தன் ஹைக்கூ கவிதையில்
இப்படிச் சொல்கின்றார்.
*
“ மாடி யறை
இலக்கியக் கூட்டம்
கலந்துக் கொள்ளும்
மழை ” – [ “ ஐக்கூ அருவிகள் ” அமுதபாரதி – நூல் பக்கம் 35 ] ஆக, இலக்கிய கூட்டமென்றால்
பலரும் கலந்துக்கொண்டு ரசிப்பது மட்டுமல்ல, எப்பொழுதேனும் திடீரென வரும் இயற்கைப் பொழிவான
மழையும் வந்துக் கலந்துக் கொள்ளும் என்கிறார். பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் கலந்துக்
கொண்டு அனுபவித்த நிகழ்வுகளின் நினைவுகளை முன்னிறுத்தி, அதனை ஹைக்கூ கவிதையில் மிகத்
திறம்பட சொல்லிப் பதிவு செய்துள்ளார் ஓவியக் கவிஞர்.அமுதபாரதி.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக