*
Na.Ga. Thuraivan's Hiku.
*
இயற்கையின்
பரிந்துணர்வை
என்றுமே சலிப்பதில்லை
வாழ்வை அனுபவிக்கும்
மரங்கள்.
*
யாரும் கவனிப்பதில்லை
என்று
எப்பொழுதும்
வருந்துவதில்லை
தும்பைப்
பூக்கள்.
*
கிளிகளும்
பார்த்ததில்லை
நானும் பார்த்ததில்லை
அத்தி மரம்
பூப்பதை….
*
பெண்கள் அனைவரும்
அரவணைக்கிறார்கள்
கள்ளிச் செடிகளை….
*
அமைதியாயிருக்கிறது
அணில் பசியாறும்
வரை
பப்பாளி பழம்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக