வெள்ளி, 8 ஏப்ரல், 2016

செய்திகள்...!! ( ஹைபுன் )


N E W S .-  இவ்வுலகம் ஊடகங்களால் சூழ்ந்திருக்கிறது. எத்திசை நோக்கினும் வான்வெளியில் காற்றின் ,ஈரப்பதத்தோடு செய்திகள் நிறைந்து ததும்புகிறது. நொடிக்கு நொடி ஒலி / ஒளிப் பரப்பாகும் செய்திகள் மக்களிடம் சென்று சேர்கின்றன.  அச்செய்திகள் எப்பொழுதும் மகிழ்ச்சியும் துக்கமும் அதிர்ச்சியும் தருகின்றன. ஆனால் அதற்காக மக்கள் யாரும் மனச்சோர்வு அடைவதில்லை. .அதனை  இயல்பாகவே எடுத்துக் கொண்டு தங்களின் வேலைகளைப் பார்க்கிறார்கள். சில மணிநேரத்திற்குள் மறந்தும் விடுகிறார்கள். அடுத்த நொடியே புதிய செய்திக்கு மனம் தாவிவிடுகிறது.
*
உலகமே உள்ளடங்கியுள்ளது
சுருக்கமான ஆங்கில எழுத்தின்
திசைகளுக்குள் செய்திகள்.

*

1 கருத்து: