*
நடைபாதையில்
மஞ்சள் கம்பளம்
கொன்றைப் பூக்கள்.
*
நள்ளிரவு நேரம்
வேப்பம்பூ வாசத்தைக்
கடத்தும் காற்று்.
*
துக்க வீட்டில்
மலர்ந்த முகங்கள்
ஒடிவிளையாடும்
குழந்தைகள்.
நூல் : விசும்பில்
சிறுபுள் – கவிஞர். பா. சேதுமாதன். திருச்சி.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக