சனி, 5 செப்டம்பர், 2015

முகமற்ற ச - முகம்...!!

*
Haibun / ஹைபுன்.
*
விடிந்தப் பொழுதுகளிலிருந்து துவங்கும் ஒவ்வொரு நாளும் மனிதர்களின் அவசர வேலைப்பாடுகளால் பரபரப்புடன் காணப்படுகின்றது. சூரிய வெளிச்சம் இல்லையெனில் மானுடர் எவரையும் கண்டு ரசிப்பது என்பது அதிசயமாகிவிடும். முகம் வெளிக்காட்டாமல் ஹெல்மெடடால் மறைக்கப்பட்டு பயணிக்கிறார்கள். தலைநிமிர்ந்து நடப்பதில்லை பலரும், புன்னகை இழந்து பயஉணர்வோடு பயணிப்பதாகவே தென்படுகின்றார்கள் பெண்கள்.. தனியார்க் கல்விக் கூடங்களின் நச்சரிப்பில் மனஉலைச்சலில் சிரிப்பை இழந்து தவிக்கின்றார்கள் குழந்தைகள். எங்கேனும் ஓரிடத்தில் மனிதர்களின் அவலக்குரல் கேட்டுக் கொண்டேயிருக்கின்றது. வாழ்க்கையை வாழ வேண்டியவர்கள் வாழ்வையே தொலைத்துவிட்டு தவிப்போராய் தெரிகின்றார்கள் 
*
தெளிவாகத் தெரிகிறது சூரியன் முகம்
வாழ்வுரிமையை இழந்து விட்டது நிலம்
சாரமில்லாமல் வாழ்கிறது மனித ச-முகம்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக