*
இயற்கையோடு இயைந்த
மனித வாழ்க்கையே இயல்பான வாழ்க்கை. இயற்கை தரும் கொடை அனைத்தும் பரிபூரணமானது. தூய்மையானது.
வளமை மிக்கது. இயற்கையின் எல்லா சுற்றுச் சூழல்களையும் மனிதன் அனுபவிக்கப் பெற்றவன்.
அவனுக்காக இயற்கைப் படைத்தப் பொக்கிஷங்கள். ஏராளம். இயற்கையின் எந்தவொரு அம்சமும் பழுதடையாதது.
அப்படியே பழுதடைந்தாலும் அதுவாகவே சீர்செய்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது இயற்கையின்
தீயவிளைவுகள் மனிதனைப் பாதித்தாலும் அவைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான பாதுகாப்பு
முன்னெச்சரிக்கைகளும் இயற்கை வழியே பெறமுடிகின்றது.
*
அழியாதது செழிப்பானது
உலகையே வளமாக்குவது
இயற்கையின் ரகசியம்.
*
விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள்
அஞ்ஞானிகள் மெய்யறிகிறார்கள்.
இயற்கையின் ரகசியம்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக