வெள்ளி, 11 செப்டம்பர், 2015

சாதிமல்லிப்பூ...!![ ஹைபுன் ]

*
Haibun / ஹைபுன்.
*
சமூகக் குழு அடையாளத்திற்காக மனிதர்கள் பெயருடன் சாதிப் பெயரை வைத்துக் கொண்டார்கள். தொழில்முறைப் பெயரும் வைத்துக் கொண்டார்கள். சாதீய எதிர்ப்பும் ஓழிப்பும் என்பது பழங்காலச் சித்தர்கள் முதல் இன்றைய அரசியல்வாதிகள் வரை ஓயாமல் பேசப்பட்டு வருகின்ற நிலையினைப் பார்க்கின்றோம். இன்றைய அரசியல்கட்சிகள். சாதியை வாக்கு வங்கியாக மாற்றி விட்டார்கள். சாதி ஒழிய வேண்டுமென்று பேசிக் கொண்டே, சாதியை வளர்த்து வருகின்றார்கள். அரசு தன் மட்டில் சாதீயச் சீர்திருத்தம் என்ற பெயரில், ஒருவருடைய பெயரிலிருந்து, வாக்காளர் பட்டியலிலிருந்து,  குடும்ப அட்டையிலிருந்து, .தெருக்களிலிருக்கும் பெயரிலிருந்து, எங்கு பெயருடன் சாதிப் பெயர் இருக்கிறதோ அதையெல்லாம் நீக்கி விடுகிறது. ஆயினும், அரசு எல்லா சாதியினருக்கும் சான்றிதழ் அளித்து அங்கீகரி்க்கிறது. ஊக்கப்படுத்தி வளர்க்கின்றது. இந்தச் சமூக முரண்பாடுடன்  தான் சமுதாயத்தில் சாதி தன் சுயமுகத்தை கம்பீரமாக்கி நடைபோடுகின்றது.
*
பெயரை நீக்கிவிட்டால் மட்டும்
மணம் மாறிவிடுமா என்ன?
சாதி மல்லிப்பூ.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக