Haiku – Tamil / English;.
*
தருமராசா கோயில்
வெளி கல்மண்டபத்தில்
வேலையற்றோர் சூதாட்டம்.
*
துரியோதனன் மாண்டான்
திரௌபதி கூந்தல்
முடித்தாள்
தீமிதித்து பக்தர்கள்
கொண்டாட்டம்.
*
விடியற்காலை மோட்சம்
அடைந்தாள்
கர்ணமோட்சம் தெருக்கூத்து
இரவெல்லாம் பார்த்தக்
கிழவி.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக