*
பலாமரத்திற்கு பலாப்பழம் சுமை. மாமரத்திற்கு மாங்கனிகள் சுமை.
தென்னைக்கு இளநீர்க் காய்கள் சுமை. காய்க்கும் மரங்கள் எல்லாம் தாய்மைக் குணம் கொண்டவை
என்பதால், அவைகள் மகரந்தச் சேர்க்கையால் சூல் கொண்டு பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகிச்
தொங்குகின்றன. பெண்ணே! நீ இயற்கையின் படைப்பில்
தாய்மையின் வசீகரமான அழகைப் பெற்று திகழ்கின்றாய். இயற்கைச் சுமப்பதை விட கூடுதாய்,
நீ வயிற்றிலே சுமக்கிறாய் இடுப்பிலே சுமக்கிறாய் தலையிலே சுமக்கிறாய் பூரணமாய் அனுபவிப்பவளுக்குத்
தானே தெரியும்? அந்த சுமையின் அந்தரங்கம்.
கருவறையின் சுமை
தாய்மையின் உச்ச சுகம்
பெண்ணிற்கு பெருமை
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக