திங்கள், 16 மே, 2016

குடை...!! ( ஹைபுன் )



இந்தப் பூமி அதிகம் வெப்பமடையாமல் பாதுகாப்பதற்காக மரம்செடி கொடிகள் எல்லாம்  குடை பிடித்து நிழல் கொடுக்கின்றன. உயிரினங்கள் கடுமையான வெப்பத்திலிருந்து, தற்காத்துக் கொள்கவதற்காக நிழல் தேடி ஒதுங்கி நின்று ஆசுவாசம் பெறுகின்றன. வயதானவர்கள் கையில் குடை வைத்துக் கொண்டே நடைபழகுகிறார்கள்.  வெயிலுக்கு நீ குடைப் பிடித்துப் போவதை நான் பார்க்கவில்லை மழைக்கு நீ குடைப் பிடித்துப் போவதை நான் பார்க்கவில்லை எப்பொழுதும் எடுத்து விரித்துப் போகாமல் எதற்காக வைத்திருக்கிறாய் கைப்பையின் உள்ளே வண்ணக்குடை? அது உன் பாதுகாப்பிற்காகத்தானே?

எடுத்துக் குடையை விரி
இருவரையும் இணைக்கும்
மழைக்கு நன்றி சொல்வோம்.

ந.க.துறைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக