* முழு
நிர்வாணமாய் நின்று
அழுதுக் கொண்டிருக்கிறது
தெருவில் ஓரு குழந்தை.
.
*முத்தமிடுவதற்கு
தடையாக இருக்கிறதென்று
வெட்டிவிட்டான் மீசை.
*எலிகளின்
நடமாட்டம்
கண்காணிக்கிறது
தூங்கும்
பாவனையில் பூனை.
. *தோட்டாக்கள்
இல்லாத
தூப்பாக்கி இயக்கி
பயிற்சி எடுக்கிறான் சிறுவன்
*காரியத்தை ஓப்படைத்தார்கள்
பொறுப்பானவன் என்று
வந்து நின்றான் அசடு வழி…
*
ஆக்கின்ஸில் இருந்தது
ஆக்கின்சோடு போனது
குழந்தை கழித்த மலம்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக