*
Na.Ga.Thuraivan's Haiku,
*
நிர்மலமான பரந்த
ஆகாயம்
எண்ணங்கள் கடந்த
மனம்
வார்த்தைகளற்ற
மௌனம்.
*
விசும்பை எட்டும்
குசும்புப் பேச்சு
கலக மொழி.
*
யார் வெறுத்தாலும்
சரி
என்னைக் கவரும்
அழகு நிறம்
காக்கையின் கருமை.
*
சொல்லடி படுவான்
மனிதன்
கல்லடி படுவான்
கனி தரும் மாமரம்.
*
குறைந்தால் குறைபடுவார்கள்
மிகுந்தால் சபிப்பார்கள்
மண்ணில் இறங்கும்
மழை.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக