தினமும் சூரிய நமஸ்காரம்
பயிற்சி செய்கிறது தவறாமல்
முள்வேலி மேல் ஓணான்.
ந க துறைவன்.
தியானம் பயிற்சி
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
தினமும் சூரிய நமஸ்காரம்
பயிற்சி செய்கிறது தவறாமல்
முள்வேலி மேல் ஓணான்.
ந க துறைவன்.
தியானம் பயிற்சி
சிவனே என்று உள்நினைந்து
சும்மா கிடந்த எனைத்
துரத்துகின்றன தொல்லைகள் அனேகம்.
ந க துறைவன்.
தொல்லைகள்
அரசியல் பேனர்களை
மிஞ்சி விட்டன.
சாலையோரம் எங்கும்
திருமணம்
இறப்பு
வண்ண வண்ண
டிஜிட்டல் பேனர்கள்.
ந க துறைவன்.
பேனர் விளம்பரங்கள்
அரசியல் பேனர்களை மிஞ்சி விட்டன.
சாலையோரம் எங்கும்
திருமணம்
இறப்பு
வண்ண வண்ண
டிஜிட்டல் பேனர்கள்.
ந க துறைவன்.
பேனர்கள்
நவீன ஹைக்கூ கவிதைகள்
எழுதுவதில் தேர்ந்தவர்
ந க துறைவன்
அவர் ஹைக்கூ கவிதைகளில்
ஆழ்ந்த பொருள் இருக்கும்.
வாசிப்பவர் உள்ளத்தில்
அலைகளை உண்டாக்கி
கொண்டே இருக்கும்.
அண்மையில் வெளியிட்டுள்ள
ஹைக்கூ தொகுப்பு
' ஒரு கை ஓசை '
அரசமரத்தடியின் கீழ்
எண்ணெய் இல்லாத
அகல் விளக்குகள்.
ஒரு கை ஓசையில்
ஓர் ஓசை.
பொன். குமார்.
9003344742
மிக்க நன்றி
பொன். குமார்.
ந க துறைவன்.
ஹைக்கூ விமர்சனம்
1.
மழைத் துளிகள் உடலில் பட்டதும்
சிலிர்த்து எழுந்தன
நீரின்றி வாடிய தவளைகள்.
2.
தவளைகள் நீண்ட உரையாடல்
மகிழ்ச்சி ஆரவாரம்
மழைக் குறித்து விமர்சனம்.
3.
எத்தனை நாளாச்சு?
ஆரோக்கியமாய் குளிச்சி
மழைநீரில் மரங்கள்.
4.
நிலவொளி அற்ற இரவு
வெளியெங்கும் மழை இரைச்சல்
வாகனங்கள் பாய்ச்சும் ஒளி.
5.
மழைக்கு ஒதுங்க
இடம் தேடி அலைகின்றன
தெரு நாய்கள்.
ந க துறைவன்.
மழைக் காலம்
விட்டு விடுதலையாகின
உதிர்ந்த மலர்கள்
முதிராத இளம் வயதில்...
ந க துறைவன்.
உதிர்தல்
விதைக்குள் மரம்
முட்டைக்குள் குஞ்சு
என் உயிருள் மரணம்.
Deed within the trees
Little egg inside
My life is death.
Thuraivan NG.
மரணம்
மலையே அழகின் பூரிப்பு
பருவகாலம் உணர்த்தி வருகை குறிஞ்சி மலர்கள் பூத்து...
ந க துறைவன்.
குறிஞ்சி பூக்கும் காலம்
எங்கோ பரப்பிரம்மம்?
உள் உறங்கும் மரணம்
என்னுள் மலர்ந்து அத்திப்பூ.
ந க துறைவன்.
மறைபொருள்
வெளிச்சத்தில் இருட்டு
மனதில் தெளிவு
பாதையில் சரளைக் கற்கள்.
ந க துறைவன்.
முரண்பாடு
வீட்டின் கதவுக்கு பின்னால்
உடல் மறைந்திருக்கிறது
சோக முகம் வெளி நீட்டி...
The door of the House is hidden
Behind the body sad face
Stretched outside.
Thuraivan NG
பெண் நிலை
நிழல்களாகவே
திரிகின்றனர்
நிஜ மனிதர்கள்
எப்பொழுதும்
வெளியில்...
ந க துறைவன்.
வெளியில்
அழிப்பதற்கு எவருமில்லை
படர்ந்து வளர்கிறது எங்கும்
நஞ்சு பார்த்தீனியம்.
ந க துறைவன்.
நஞ்சு பார்த்தீனியம்
இருவழி சாலை
பச்சை வாழையிலை
எறும்புகள் உல்லாச பயணம்.
ந க துறைவன்.
பயணம்
நீண்ட தாடி வளர்த்தது
சாமியாராய் துவராடை அணிந்து
குளக்கரை ஆலமரம்.
ந க துறைவன்.
தாடி வளர்ப்பு
யானை முகத்திற்குள்
மறைந்திருக்கிறது ரகசியம்
புத்தனின் ஞான முகம்.
ந க துறைவன்.
மறைஞானம்
காய்ந்த இலைகளுக்கு
சிறகு முளைக்கின்றன
பலத்த காற்றின் போது.
*
சருகு இலைகள்
எரித்து குளிர்க்காய்கிறான்
வழிப்போக்கன்.
ந க துறைவன்.
காற்றின் போது
காய்ந்த இலைகளுக்கு
சிறகு முளைக்கின்றன
பலத்த காற்றின் போது.
ந க துறைவன்.
காற்றின் போது
உள் உணர்ந்து காண்கிறேன்
கடந்து செல்கிறது மனம்
சூரிய வெளிக்கு அப்பால்.
I see has realized
Passes the mind
Beyond the outer space.
Thuraivan NG
வெளியில்...
அப்பா
1.
அப்பாவின்
சுண்டுவிரல்
பிடித்து நடந்த மகன்
திருமணத்தில்
மனைவியின்
சுண்டுவிரல்
பிடித்து நடந்தான்
இப்பொழுது
சுண்டுவிரல்
கவனமே
இருவருக்குமில்லை.
2.
மகனைத் தோளில்
சுமந்து
கருடசேவை
தரிசனம் செய்தார்
அப்பா.
3.
இப்பொழுது
அப்பாவின் நினைவேயில்லை
மகனுக்கு
இரண்டு குழந்தைகள்
பெத்த பிறகு.
4.
அப்பாவுக்கு
மகளைப் பிடிக்கும்
அம்மாவுக்கு
மகனைப் பிடிக்கும்
இப்பொழுது
இருவரின் பிடிப்பும்
கைவிட்டு போய்விட்டது.
5.
மகன்
கல்வி கற்க வேண்டி
கடன் வாங்கி
சொத்தைக் கரைத்தார்
அப்பா.
6.
அப்பாவின்
பாக்கெட்
காலி
செய்து விட்டான்
பாச மகன்
7.
அப்பாவுக்கும்
மகனுக்கும்
பிரச்சினை
வரும் போதெல்லாம்
இருவரையும் சமாளிக்கும்
சமாதானப் புறா
அம்மா.
8.
அப்பாவின்
சொத்து பத்திரங்கள்
அனைத்தும்
மகன் பெயருக்கு
மாறிவிட்டது
அப்பா
இப்பொழுது...?
9.
மகன் வருகை
எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறார்
மரணித்த
அப்பா
சவப்பெட்டிக்குள்.
ந க துறைவன்.
அப்பாவின் வலி
அறையில் இன்னிசை
சிறகு விரித்து குருவி பறத்தல்
கற்பனைக்கு அப்பால் வெளி.
ந க துறைவன்.
வெளிக்கு அப்பால்
விடைபெற்றது கோடை
மீண்டும் அடுத்த ஆண்டு வரும்
ஓராண்டு கூடியது வயது.
ந க துறைவன்.
கோடை விடைபெறல்
சூரியன் சிவந்தான்
கடல்நீர் பிரதிபலித்தது
முத்துகள் ரத்தநிறம்.
He was the Sun Red
Seawater is reflected
Blood coloured pearls.
Thuraivan NG
வெண்முத்து நிறம் மாறல்
எதாவது எழுத எண்ணம்
எதை எழுதுவது?
எதையாவது எழுதி நிரப்பு.
ந க துறைவன்.
எதை எழுத...
அவளின் அதிகாரம் உச்சம்
யாரும் தலையிட மறுப்பு
அகங்காரம் தொனி ஆயுள்வரை.
ந க துறைவன்.
மன இயல்பு
எல்லையற்ற கருணை மனம்
எந்த மரமும் நிராகரிப்பதில்லை
பறவைகள் அமர்ந்து ஒய்வெடுப்பதற்கு.
ந.க துறைவன்.
பறவைகள் ஓய்வு
புதர்கள் அடர்ந்த வனப்பகுதி
ஊர்எல்லைக்கு வெளியே
காவல் இருக்கிறாள் குலதெய்வம்.
ந க துறைவன்.
காவல் காக்கிறாள்
நிழல் அற்ற வெட்டவெளி
பிரதிபலிக்கின்றன வெப்பக்கதிர்கள்
பறந்து செல்கிறது சட்டென
பாறைமேல் அமர்ந்த பறவை.
ந க துறைவன்.
கோடை வெயில்
பாதையோரம் கிழவி
தலையில் முக்காடு
கூடை நிறைய நுங்கு.
ந க துறைவன்.
கோடை வெயில்
அனல் வீசும் கோடை காற்று
வெக்கையில் வியர்வைத்துளிகள்
மண் குடத்தில் சூரியன்.
ந க துறைவன்.
கோடை வெயில்
சித்திரை
பொன்னிற இலைகள் உதிர்த்து
புதிய துளிர்கள் பசுமையாய்
இயற்கையின் வசந்த விழா.
ந க துறைவன்.
புது வருடம்
சித்திரை
பொன்னிற இலைகள் உதிர்த்து
புதிய துளிர்கள் பசுமையாய்
இயற்கையின் வசந்த விழா.
ந க துறைவன்.
புது வருடம்
சிதிலமடைந்த சுவர்
நினைவு சின்னமாய்
மூதாதையர் வாழ்ந்த வீடு.
Dilapidated walls
You monument
Their ancestors lived in the house.
ந க துறைவன்.
மூதாதையர் வீடு
நடுப்பகல் உச்சி வெயில்
வியர்வை சிந்தும் சுரப்பிகள்
தலைகவசம் இழந்த புத்தர்.
At midday the sun top
Sweat glands
Buddha lost helmet.
ந க துறைவன்.
கோடை வெயில்
வாரம் இறுதி நாள்
முகத்தில் ஒரு மலர்ச்சி
ஞாயிறு வெறுப்பால் சலிப்பு.
ந க துறைவன்.
மனம் சலிப்பு
குளிர் புங்கை மரநிழல்
படுத்திருந்தது எருமை
இடம் தேடி நாய்கள் போட்டி.
ந க துறைவன்.
கோடை வெம்மை
இசை பாடும் பறவை
உலகெங்கும் பறந்து
மூதாதையர்களை கூர்ந்து.
Singing bird
Fly around the world
Ancestors remembered.
Thuraivan NG
நினைவுகூர்ந்து
மல்லிகைப்பூ வாசம்
உதட்டில் புன்னகை
கையில் செல்பி ஆல்பம்.
Jasmine aroma
The smile on the lips
In the hands of selfie album.
Thuraivan NG
ந க துறைவன்.
கையில் செல்பி
ஹைக்கூ
பனி அகன்றது மெல்ல
வசந்த காலம் அரும்பியது
அழகியல் வேம்பு பூக்களோடு!
+
Snow went slowly
In the burgeoning spring
Beauty with neem flowers.
Thuraivan NG
பருவ காலம்
தரையில் உதிர்ந்த வேம்பூக்கள்
முகர்ந்து விலகியது நாய்
மழைநீரில் மிதந்தன மகிழ்ச்சியாய்.
ந க துறைவன்.
மழை நாளில்...
எங்கிருந்து வருகிறது இசை?
திசைநோக்கி பறக்கும் பறவை
ஏகாந்த அண்டவெளி.
ந க துறைவன்.
ஏகாந்தம்
முத்தத்தின் ஈரம் உதட்டில்
காய்வதற்குள் தேனீர் கொடுத்தாள்
கூடுதலாய் இனிப்பின் சுவை.
ந க துறைவன்.
இனிப்பின் சுவை
இலைகளற்ற மரம்
கம்பீரம் இழந்து
ஆடுகள் நிழல் தேடி.
ந க துறைவன்.
இலைகளற்ற மரம்
உதிர்ந்து கிடந்தது தரையில்
அவளுடைய சோக முகமாய்
வதங்கிய வாசமற்ற பூச்சரம்.
ந க துறைவன்.
வாசமற்ற பூ
நிழலுக்கு பார்வையில்லை
சூரியன் கண் பிரகாசிக்கிறது
வாத்துகள் குளிர்ந்த புல்வெளியில்.
ந க துறைவன்.
பார்வையற்ற நிழல்
வேலியின் நுனியில் ஓணான்
அருகில் தென்னை நிழல்
மேலே அசைகிறது கீற்று.
ந க துறைவன்.
வெளியில்.....
குளிர் காலம் விடைபெறுகிறது
வெப்ப நிலை மாற்றம்
இலை உதிர்காலமே வருக...
ந க துறைவன்.
பருவநிலை மாற்றம்
முகர்ந்து பார்த்தது நெருங்கி
நாற்றமென்று உணர்ந்ததோ?
பசியில் அலைகிற நாய்.
ந க துறைவன்.
பசியில்...
கொல்லைப்புறம் எப்போதும் பார்வை
வாழைக்குலை தள்ளியிருக்கிறது
பக்கத்து வீட்டில் சுகப்பிரசவம்.
ந க துறைவன்.
சுகப்பிரசவம்
பறவைகள் சந்தோஷமாய் வருகின்றன
குளிர் தணிந்திருக்கிறது
வேம்பு பூக்கும் காலம்.
ந.க துறைவன்
பனி பொழிவு நேரம்
மூலிகை செடிகள் குளியல்
அருவி நீர் இசை.
ந.க துறைவன்.
தும்பிகள்
குறைந்த வெப்ப நிலை
பூவின் அழகு
தும்பிகள் பறக்கிறது நெருங்கி.
Low temperature with
the beauty of flowers
Dragonflies flies closer.
Thuraivan NG
பூவின் அழகு
பத்து ரூபாய் நாணயம் கையில்
என் அதிஷ்டம்
முழுநிலா.
ந க துறைவன்.
கையில் நாணயம்
இடைவெளி
நிறைவான குடும்ப வாழ்க்கை
நிகழ்ந்த மரணம்
மீண்டும் தலைமுறை இடைவெளி.
ந க துறைவன்.
தலைமுறை இடைவெளி
ஒற்றை பூ
உன் தலையை அலங்கரித்து
அழகால் கவரும் பலரை
அந்த ஒற்றை பூ.
Decorate your head
Many attracted by the
Beautiful of the single flower.
Thuraivan NG.
தலையில் பூ
நூற்றாண்டுகள் கழிந்தது
அழியாமல் இருக்கிறது
புத்தர் கால் தடயங்கள்.
ந க துறைவன்.
புத்தர் கால் தடயங்கள்.
ரயில் தடங்கள் இரைச்சல்
எதிர் திசையில் மரங்கள்
மறைந்தது ஊர் பெயர்.
ந க துறைவன்.
எதிர் திசையில்
மன இறுக்கமாய் முகக்குறி
பேச்சில் நிதானமற்ற நிலை
மலர்ந்த புன்னகை வாடல்.
ந க துறைவன்.
மன இறுக்கம்.
கண்கள் படித்தது விழிப்புடன்
சுவரில் கோளறு பதிகம்
கழியாத கசடுகள் மனதில்...
ந க துறைவன்.
கழியாத கசடுகள்.
உள்ளறை எங்கும்
சூழ்ந்திருக்கிறது
அவள் போட்டச்
சாம்பிராணி புகை
வாசம்
நாசியின் நுனியில்
குறுகுறுக்கிறது
மனசு கொஞ்சம்
துறுதுறுக்கிறது
இருள் கவிழ கவிழ...
ந க துறைவன்.
புகை வாசம்
நாய்கள் உற்றுப் பார்க்கிறது ஏக்கமாய்
நீர்ஒழுக நாக்கை நீட்டி
தொங்கும் கறிச் சதைகளை...
ந க துறைவன்.
உற்று நோக்கல்.
உடல் வெட்கத்தில் சிலிர்க்கிறது
காம விழிப்பின் மௌனம்
தலைநிறைய மல்லிப்பூச்சரம்.
ந க துறைவன்.
விழிப்புணர்வு
பூசணி செடி
எப்பொழுதும் விரும்புகிறது
ஏழையின் குடிசை அழகு.
ந க துறைவன்.
குடிசையின் அழகு
மார்கழி பஜனை போகிறது
ஆண்டாள், தோழிகள் இல்லை
ஆண்கள் குழுவாய் குளிரில்...
ந க துறைவன்.
திருப்பாவை பாடி