புதன், 18 டிசம்பர், 2019

செவ்வாய், 29 அக்டோபர், 2019

சித்தன். ( ஹைக்கூ )

சித்தன் சித்தி அடைந்தான்

அது இப்பொழுது பக்தர்கள்

வழிபடும் சித்தர் சமாதி.

ந க துறைவன்.

குரு... ( ஹைக்கூ )

குரு இல்லை

சீடர்கள் இல்லை

வெறுமையாய் குகை.

ந க துறைவன்.

வியாழன், 24 அக்டோபர், 2019

மழைநீர் ( ஹைக்கூ கவிதைகள் )

1.
குளிர்கால மரங்கள்
ஒவ்வொரு நாளும் வானில்
ஊர்ந்திடும் அதிக மேகங்கள்.
2.
கழுவி செல்கிறது
சுத்தமில்லாத பாதையில்
நடந்த கால்களை மழைநீர்.
3.
உடல் சிலிர்ப்பி
தலை துவட்டுகிறது
மழையில் நனைந்த குருவி.
4.
ஊருக்குள் வந்தால் இரைச்சல்
மலைக்குச் சென்றால் மௌனம்
சலித்துக் கொண்டது மனம்.
5.
சிவந்து விட்டது அழகாய்
பச்சை இலையில்
கிளிகள் வைத்த முத்தங்கள்.

ந க துறைவன்.

வெள்ளி, 18 அக்டோபர், 2019

அர்த்தநாரி...!! ( ஹைக்கூ கவிதைகள் )

சக்தி சிவனுக்குள்
சிவன் சக்திக்குள்
எல்லாமே அணுவுக்குள்…!.
*

மாம்பழம் கையில் வைத்து
பால் குடிக்கிறது
அழுகிற குழந்தை.
*
 “ நெருங்கி வராதே ” என்று
வண்ணத்துப்பூச்சிக்கு
கையசைக்கிறது மலர்கள்.
*
மனம் குளிர்ந்ததோ?
மௌனமாய் சிரிக்கிறான்
அபிஷேகப் பிரியன் சிவன்.
*
சிறகை உதிர்த்துப் போனது
அடையாளத்திற்காக
இணையைத் தேடிய பறவை.

ந க துறைவன்




உறவு...!! { ஹைபுன் }

*
உறவு { ஹைபுன் / HAIBUN }.
*
வீடு, பூட்டியிருந்தது. “ எங்கே போயிருக்கிறார்கள் ” என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தரார். “ தெரியலேயே சார், எங்கே போறேன்னு யாரிடம் சொல்லிட்டுப் போறாங்க ” என்று கொஞ்சம் கடுப்பாகவே பதில் சொன்னார். அவருக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ‘ நன்றி சார் ‘ என்று சொல்லிவிட்டு நகர்ந்தவர், பக்கத்திலிருந்த மரத்தடியின் அடியில் ஒதுங்கி நின்றார்.
*
பக்கத்து வீட்டுக்காரன் பகை
எதிர் வீட்டுக்காரன் நண்பன்
உறவுக்கு கைகொடுக்கிறது மரங்கள்.

*  

ஊரில் திருவிழா...!! { கவிதை }.

*
ஊரில் திருவிழா…!! { கவிதை }
*
உங்க ஊரு
திருவிழாவுக்கு
அழைத்துப் போ
தம்பி !.
*
தீமிதி வைபவத்தை
கிட்ட நின்னுப் பார்க்கணும்
திரௌபதி கூந்தல்
முடித்து அக்னி
மடியேந்தும் காட்சியை
அருகிருந்துப் பார்க்கணும்
எனைக் கரம்பிடித்து
அழைத்துச் சென்று
அத்தனையும் காட்டு தம்பி.!.
*
வாணவேடிக்கை
கொஞ்சம்
தொலைவிலிருந்துக் 
காட்டு தம்பி !.
*
வெப்பம், புழுக்கம்
போக்கிடவே
சில்லுன்னுக்
கோலி சோடா ஒண்ணு
வாங்கி கொடு தம்பி !.
*
பஞ்சு மிட்டாய் பொரிகடலை
சவ்வு மிட்டாய் கரும்பு சாறு
வாங்கி கொடு தம்பி !.
*
பாம்புத் தலைப்
பெண் அழகைப் பார்க்கணும்
எங்கிருக்கோ அங்கே
அழைத்துப் போ தம்பி !.
*
ரங்கராட்டினம் ஏறி
குதிரையிலே
சவாரிப் போகணும்
ஏற்றிவிடு தம்பி !
*
இராத்திரிக்குக்
கரகாட்டம் மயிலாட்டம்
பார்ப்பதற்குத்
துணையிருப்பாய் தம்பி !.
*
திரௌபதி சபதம்
முடிச்ச கடைசித்
தெருக்கூத்துப்
பார்த்துக் களிக்கணும்
பாட்டைக் கேட்டு
ரசி்க்கணும் தம்பி.
கட்டியங்காரன்
நகைச்சுவையைக்
கேட்டு சிரிக்கணும்
தம்பி.!..
*
ஆகா, விடிய விடிய
கூத்துப் பார்த்து
அசந்துத் தூங்கிட்டேன்
ஊருக்குப் போவதற்கு
எத்தனை மணிக்கு
பஸ் தம்பி !.
*
- { தம்பி கவியருவி. ம. இரமேசுக்கு.}

*

கிராமத்து வாடை ( கவிதைகள் )

*
கருமலையோ மிக உயரம்
அழகுப்படுத்துகிறது நெட்டையான
ஒற்றை பனைமரம்.
*
பேச்சில் கிராமத்து வாடை
வியாபாரம் செய்ய வந்தவள்
தலையில் தயிர் கூடை.
·          
யாரோ ஏற்படுத்திய சினம்
பொறுத்தக் கொண்டான். எப்படியோ?
அமைதியடைந்தது மனம்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு ரகம்
ருசியாய் விரும்பிக் கடித்துச் சிலர்
சாப்பிடுவதோ விரல் நகம்.
*
நடப்பதற்கு ஏனிந்தச் சிக்கல்
காலை உறுத்தியது
காலணிக்குள் சிக்கிய சிறுகல்.

*

மஞ்சள் வெயில்...!! { புதுக்கவிதை }.


*
மழை நின்ற பின்
அழகாகவிருந்தது
அந்தி
மஞ்சள் வெயில்
*.
கூடு திரும்பின
இரைதேடி அலுத்தப்
பறவைகள்.
ஆடுகள் மாடுகள்
வீடு திரும்பின
பொழுதோடு
மேய்ந்து வயிறு
நிரம்பிய திருப்தியோடு,
*
வேலைக்குச் சென்றவர்கள்
களைப் போடுத் திரும்பினார்கள்
தேவையானப் பொருட்களை
வாங்கிச் சுமந்து
இரவு உணவு சமைப்பதற்கு,
*
மழை வரும் போல
மேகமூட்டம்
விலகவில்லை இன்னும்,
மழையில் நனைந்து
சுகிக்கலா மென்று
எதிப்பார்த்திருக்கின்ற
மௌன மரங்கள்.
*
விடிய விடிய
பெய்து தீர்த்தது
நள்ளிரவு
தொடங்கிய மழை…!!.
*


ஈச்சங்குலை...!! { கவிதைகள் }

*
ந.க. துறைவன் கவிதைகள்
*
பிரச்சினையைப் பேசினாள் மகள்
கீரையை அலசினாள் தாய்.
*
பேரம் பேசி வாங்கினாள் வீட்டம்மா
கஷ்டத்தைக் கூறி ஆதங்கப்பட்டாள் கீரைக்காரி.
*
கலகமூட்டாமல் போவதில்லை
வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள்.
*
கடன் கொடுத்தவன் வாங்க அலையிறான்
கடன் வாங்கியவன் கொடுக்க திணறுகிறான்.
*
வீட்டை அழகுப் படுத்துகின்றன
தவணையில் வாங்கிய பொருட்கள்
*


திரும்பி வந்தான்...!! ( கவிதைகள் )

*
திரும்பி வந்தான்…!!
*
கிராமத்திலிருந்து
நகரத்திற்குப் போனான்.
பிழைப்பதற்கு,
மீண்டும் ஊர்
திரும்பி வந்தான்
உழைப்பதற்கு….!!
*
சாணித் தெளிக்கும்
பெண்ணைப்
பார்த்துவிட்டு
எழுந்து ஒடியது
வேகமாய்
தெரு நாய்…!!.
*
உயரமான மரத்தில்
எத்தனை அழகாக
வரிசையில் போய்
அச்சமின்றி ஏறுகிறது
கட்டெறும்புகள்….!!.

*

குண்டுமல்லிப் பூ...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
பளபளவென்று இருந்தது
கைப்பட்டவுடன் சுருங்கியது
பட்டுரோஸ் பூக்கள்
*

குண்டாகயிருந்தாலும்
அழகாகவே இருக்கிறது

குண்டுமல்லிப்பூக்கள்….!!

வா...!! ( ஹைக்கூ கவிதைகள் )

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
ஆழ்ந்தப் புத்தக வாசிப்பு
வரிகளின் வசீகரிப்பு
இடையிடையே புன்சிரிப்பு.
*
பெண்ணின் கண்ணீராய்
சொட்டிக் கொண்டிருந்தது
தெருக் குழாய்.
*
கைக் கூடி வந்த பின்
எதையோ செய்யத் தூண்டுகிறது
ஏதோவொரு அதீத நினைப்பு.
- ந.க. துறைவன் ஹைக்கூக்கள்.

*

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.


N.G. THURAIVAN’S HAIKU.
TAMIL / ENGLISH.
*
கர்ப்பக்கிரகத்துள் மூலவர்
சுவரிலோ
சி்ற்பியின் பாலியல்.
Sanctum sanctorum-
At the corridors,
Sex appeats of the sculptor!
*
தனிமை நிலவு
வீதியில் காவல்
நடுநிசி நாய்கள்.
Solitary moon
to guard the streets
midnight dogs.
*
அண்மைக் காலமாய்
அருகிப் போனது
சிரிப்பின் அற்புத கணப்பொழுது.
Nowadays – the pleasant
moments of laughter
becoming almost a rarity!.
*
நிரம்பி வழியும் ஏரி
துணிச்சலான சவாரி
சருகு இலைப் படகுகள்.
Lake overflows….
on expedition, the boats,
with withered leaves!.
*
சாபமா கோபமா
வானம் பார்த்த பூமியில்
பொழிவதில்லை மேகம்.
Fury or a curse?
Clouds, heedless
Of the drought – prone soil!.
*
சஞ்சல மனத்திற்கு
சஞ்சீவி மருந்து
மோன மௌனம்.  
A panacea
For a waverly mind
Silent composure.
*
மடியில் உறங்கும் குழந்தை
அம்மாவின் வயிற்றில் துள்ளும்
இன்னொரு குழந்தை.
On mother”s lap
a child asleep whilst
a foetus nudging at womb!
*
தமிழ் : ந.க. துறைவன்
Tamil : N.G. THUAIVAN.  
ஆங்கிலம் : கவிஞர். அமரன்.
Eng .Translated by : Kavingzhar. AMARAN. 
நன்றி :- “ மகாகவி ” – டிசம்பர்- 2014. இதழில்
வெளிவந்துள்ளது.

*

புதன், 16 அக்டோபர், 2019

இலைகள்

பதற்றம்...!!

*
N.G. THURAIVAN'S HAIKU.
*
பார்வை எதிலோ லயித்திருந்தது
எதையோ நினைக்கிறது மனம்
சுடர்விடும் சிந்தனையில் சூரியன்.
*
எதிர்ப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்
ஏமாந்தவர்களுக்கு பதற்றம்
சலசலத்து ஒடுகிறது ஆற்றுநீர்.
*
இன்னும் எவரொருவராலும்
முழுமையாக எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான பதில்.

*

ஓதுக்கல்...!!


*
மீண்டும் கிடைக்கப் போவதில்லை
கடந்துப் போகின்ற மணித்துளிகள்.
*
ஒதுங்கியவன் நெருங்கி வந்தான்
ஒதுக்கியவன் விலகிப் போனான்.
*
ஊரோடு ஒத்து வாழ்வதில்லை
வேறுப்பட்டுத் தான் வாழ்கிறார்கள்.

ந.க. துறைவன். 

குளிர் நிழல்...!!


*
கடந்த காலம் மறந்தான்
எதிர்க்காலத்தை நினைத்தான்
தொலைத்து நிற்கிறான் நிகழ்காலம்
*.
தணியாத வெயில் தீராத தாகம்
இளைப்பாற்றுகிறது
புங்கமரக் குளிர் நிழல்.
*
யாரென்று தெரியவில்லை
குரல் கேட்கவில்லை
எதிரொலிக்கின்றது மலை.
*

பாரம்...!! [ சென்ரியு ]

*
முன் பாரம் இல்லை
பின் பாரம்  இல்லை
வயிற்றில் பாரம்.
*

புயல்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;
*
வாழ்க்கையைச் சூழ்ந்து
மையம் கொண்டிருக்கிற
புயல் சின்னம்.

*
Life surrounded
Contains Center
Storm logo.
N.G.Thuraivan.

*

தாழம்பூ

உணர்வைக் கிளர்த்தும்
உன்னதப்பூ
காமப்பூ...தாழம்பூ.

ந க துறைவன்.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

நக்கீரன்...!! ( ஹைக்கூ )

*
ஹைக்கூ படித்தான் தருமி
அரசவையே ரசித்தது
குற்றம் கண்டான் நக்கீரன்.

*

முதல்...! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
இனிய காலைப்பொழுது குளிரில்
விழித்த முதல் மலர் எதுவென்று
நம்மால் காண முடியுமா?
*
Cool off in the morning
What woke up the first flower
Can you see?
*

ஹைக்கூ...!!

Haiku – Tamil / English;
*
சத்தியம்,சிவம், சுந்தரம்
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
Truth, Shivam, Sundaram
Three on the forehead
Haiku lines.

*

தாமரைப்பூ...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
தன்  நிழலை  நீரில்
தானே  பார்க்கிகிறது
தாமரைப் பூ.
*
His shadow in the water
Sees Himself
Lotus flower.

*

இருப்பு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
உனக்குள் எதுவுமில்லை
ஆனாலும்,
எல்லாமே இருக்கிறது.

There is nothing in you
However,
Everything.

*

புத்தம்

*
ஈச்சங்குலை…!! { ஹைக்கூ / HAIKU }

புத்தரிடமிருந்து புத்தம்
என்னுள் ஒளிர்கிறது புத்தம்
விழிப்புணர்வு புத்தம்.
*
அள்ளி எடுத்தேன்
உள்ளங்கை நிறைய
முக்கடல் நீர்.
*
வார்த்தை இலைகள்
மௌனமாய் உதிர்த்தது
பேசாத மரங்கள். 
*
இரவில் பேசுகிறது என்னிடம்
கோடி மைல்களுக்கப்பால் இருந்து
ஒளிரும் நட்சத்திரங்கள்.
*
உலுக்கி எழுப்பியது கனவு
விழித்துப் பார்க்கிறேன்
கேலியாய் சிரிக்கிறது இருட்டு.

***

உறவு

*
உறவு { ஹைபுன் / HAIBUN }.
*
வீடு, பூட்டியிருந்தது. “ எங்கே போயிருக்கிறார்கள் ” என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தரார். “ தெரியலேயே சார், எங்கே போறேன்னு யாரிடம் சொல்லிட்டுப் போறாங்க ” என்று கொஞ்சம் கடுப்பாகவே பதில் சொன்னார். அவருக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ‘ நன்றி சார் ‘ என்று சொல்லிவிட்டு நகர்ந்தவர், பக்கத்திலிருந்த மரத்தடியின் அடியில் ஒதுங்கி நின்றார்.
*
பக்கத்து வீட்டுக்காரன் பகை
எதிர் வீட்டுக்காரன் நண்பன்
உறவுக்கு கைகொடுக்கிறது மரங்கள்.

*  

அறிமுகம்

*
ஐக்கூ மின் இதழ் அறிமுகம்.
*
“ கவிச் சூரியன் ” – ஐக்கூ மின் இதழ்
மே – 16-31 – 2014.
*
இவ்விதழில், சர்வ தேச தினங்களான
1. உலகப் புகையிலை எதிர்ப்பு தினம்.
2. உலகத் தொலைத்தொடர்பு தினம்.
3. உலகத் தொழுநோயாளர் தினம்.
4. வன்முறை எதிர்ப்பு தினம்.
*
ஆகியவற்றைச் சார்ந்த ஐக்கூ கவிதைகள், கவிஞர்களின் கண்ணோட்டத்தில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அரசியல் மாற்றத்தினை வரவேற்று, தனது கருத்தினை நம்பிக்கையோடு முன் வைத்துள்ளார் ஆசிரியர்.
கவிவேந்தர். வேழவேந்தன், நூல் அறிமுகம், சுவடுகள், எண்ணக்கதிர்கள் பகுதிகள் சிறப்பாகவிருக்கின்றன. “ கவிச் சூரியன் ” –16-31- மே- 2014 ஐக்கூ மின் இதழ் தயாரிப்புப் பணி மிக மிக நேர்த்தியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.  
*
பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்.. 
*
நன்றியுடன்,
ந.க. துறைவன், வேலூர் – 632 009.
செல் : 9442234822 / 8903905822.
*


பூமி

*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-


ஞானம்

மூதாதையர்க்குத் தெரிந்தது மண்கலம்
இளந் தலைமுறைக்குத் தெரிந்தது
விஞ்ஞானச் சாதனம் விண்கலம்.
*
வீதியில் ஒரே பரபரப்பு
சாதிக் கலவரம் சூழ்ந்த நகரம்
பீதியில் கடையடைப்பு.
*
மனிதருக்குப் பிடித்தது மதுபானம்
போதையிலே பிறந்தது சிலருக்கு
கவிதை மெய் ஞானம்.
- ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்

*

வாசிப்பு

ஆழ்ந்தப் புத்தக வாசிப்பு
வரிகளின் வசீகரிப்பு
இடையிடையே புன்சிரிப்பு.
*
பெண்ணின் கண்ணீராய்
சொட்டிக் கொண்டிருந்தது
தெருக் குழாய்.
*
கைக் கூடி வந்த பின்
எதையோ செய்யத் தூண்டுகிறது
ஏதோவொரு அதீத நினைப்பு.
- ந.க. துறைவன் ஹைக்கூக்கள்.

*

ஒட்டச்சிவிங்கிகள்

ஒட்டகச்சிவிங்கிகள்….!!
*
தொலைவில் வருகின்றன
கூட்டமாய் ஒட்டகச்சிவிங்கிகள்
ஈச்சமரங்களுக்கு அச்சம்.
*
வெளியே முள் உள்ளே பழம்
ஆசையோடு வாங்குகிறார்கள்
அன்னாசிப் பழம்
*
வயோதிகம் பற்றி அறியுமோ?
ஆயிரங்காலமாய் வளர்ந்து நிற்கும்
கற்பக விருட்சங்கள்.

*

மனம்

N.G. THURAIVAN'S HAIKU. 
பார்வை எதிலோ லயித்திருந்தது
எதையோ நினைக்கிறது மனம்
சுடர்விடும் சிந்தனையில் சூரியன்.
*
எதிர்ப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்
ஏமாந்தவர்களுக்கு பதற்றம்
சலசலத்து ஒடுகிறது ஆற்றுநீர்.
*
இன்னும் எவரொருவராலும்
முழுமையாக எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான பதில்.

*

நியதி

நியதி…!! [ HAIKU / ஹைக்கூ ]
*
இருப்பது எதுவும் எனதல்ல
இருக்கப் போவதும் எனதல்ல
இருக்கின்றது யாருக்குச் சொந்தம்.
*
மழையை எதிர்ப்பார்த்து
கணந்தோறும் காத்திருக்கிறது
காட்டில் வளரும் மரங்கள்.
*
கூர்மையான அறிவு இருக்குமோ?
நியதி தவறாமல் வாழும்
ஜீவராசிகளுக்கு…

ந.க. துறைவன். 

பூ

மாலை மயங்கியது
முகத்தில் சிரிப்பில்லை
தலையில் வாடிய பூ.
ந.க.துறைவன்.
*                                           
மாலை வணக்கம் நண்பர்களே…

ந.க.துறைவன்.

எறும்புகள்

Haiku – Tamil / English.
*
மழையில் நனைந்தவாறு
பாறையில் ஏறுகிறது
வரிசையாய் எறும்புகள்.
ந.க.துறைவன்.
*
Basking in
Loading rock
Ants series.

N.G.Thuraivan.

நாதம்

மௌனமாய் என்னுள்
கரைந்தது
இசையின் நாதம்.
*
Silence me
Dissolved
Tone of the music  

N.G.Thuraivan.

நிஜம்

Haiku – Tamil / English;
*
எது நிஜம் எது பொய்?
எவருக்கும் தெரியாது?
எல்லாமே நிஜம்..
*
What is true and what is false?
Who knows?
Everything is real ..
N.G.Thu

*

ரீங்காரம்

மார்கழி – 23.
*
தூங்கும் பூக்களின்
உறக்கம் களைத்தெழுப்புவிறது
பொன்வண்டின் ரீங்காரம்..
*
மார்கழி – 24.
*
முற்றிய நெற்கதிர்கள்
பனிநீரின் பாரத்தால்
சிரம் தாழ்த்தி மண் வணங்கும்.