ஞாயிறு, 16 மார்ச், 2014

தொந்திக் குலுங்கியது

*ந.க.துறைவன் {சென்ரியு} கவிதைகள்

கோழை என்று அவனை
கேலி செய்தார்கள்
செய்துக் காட்டினான் ஓரு சாதனை.
*
கிழவிகளி்ன் மனச் சுமையை
இறக்கி வைக்கிறது
அவர்கள் பாடும் ஒப்பாரி.
*
சிரிக்கச் சிரிக்கத்
தொந்திக் குலுங்கியது                     

குழந்தைக்குச் சிரிப்பு.

வியாழன், 13 மார்ச், 2014

அற்புதத் தருணம்.

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
இலைகளின் இடைவழியே
தெளிவாகத் தெரிந்தது
பௌர்ணமி நிலா.
*
எந்த நொடியில் இருக்கிறது
வாழ்வின்
அற்புதத் தருணம்.

*
இனம் புரியாதத் தோய்வும்
மனச் சலிப்புமாய்
கடுத்துக் காட்டுகிறது முகம்.


பலூன் சிரிப்பு {ஹைபுன்}


*
திருமண மண்டபத்திற்கு வெளியில் காற்றோட்டமாய் கூடி நின்று
 சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.,நகைச் சுவையாய், அவர்கள்
 பார்வையை வேறு வேறு திசையில் பாய விட்டுச் சிரித்துக்
கொண்டிருந்தார்கள். பலரும் பேசுபவர்களை வேடிக்கைப் பார்த்துக்
கொண்டே “ அப்படி என்ன தான் நகைச்சுவையாகப் பேசிக்
கொள்கிறார்கள்” என்று கேட்காமல், முகத்தை வேறொரு பக்கம்
திருப்பி வைத்துக் கொண்டுக் கடந்துப் போகிறார்கள்.
வேகவேகமாய் ஊள்ளிருந்து வெளியில் வந்தவர், அவர்களின்
சிரிப்பில் பங்குக் கொள்ள முயன்றார். அவரைப் பார்த்த போதே
பேசிக் கொண்டிருந்தவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டு.
கலர்கலராய் முகூர்த்தப் பட்டுப் புடவையில் சிரிப…சிரிப்….என்று
சத்தமிட்டுப் போகும் பெண்களின் மீதுப் பார்வைப் பதித்து,
அனைவரும் அமைதியானார்கள்.
      குழந்தைகளின் கைகளில் இருக்கும்
      பலூன்களின் பறக்கும் சிரிப்பை

      வேடிக்கைப் பார்க்கிறது குரங்குகள்.

புதன், 12 மார்ச், 2014

*உயிர் மூச்சு{ ஹைக்கூ}

*உயிர் மூச்சு{ ஹைக்கூ} .

*
கை வேலை செய்கிறது
வாய் பேசுகிறது, பூத்தொடுப்பவளைக்
கவனிக்கிறது பூக்கள்.                                      
*
கண்ணாடிச் சன்னலை எதற்கோ?
பட்பட் டென்று கொத்தி
அழைக்கின்றன சிட்டுக் குருவிகள்.

*
இதமாய் உணர்த்தியது
என் மேல் பட்டு
பூக்களின் உயிர் மூச்சு. 

திங்கள், 10 மார்ச், 2014

அரட்டைக் கச்சேரி

ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்
*
சுவைக்கிறார்கள் கடலைப் பொரி
ஆல மரத்தின் கீழ் அமர்ந்துப்
பெரிசுகளின் அரட்டைக் கச்சேரி
*
எல்லாமே இப்பொ.ழுது சரி
எதற்காக வெண்ணிறமாய்
நெற்றியில் ஒற்றை வரி்
*
தினமும் காலையில் பஸ்கி்
எடுத்து உடலை வளர்ப்பவன்
இரவில் அருந்துகிறான் விஸ்கி
*
அழுது அடக்கினால் விம்மல்
நிறுத்த முடி.யவில்லை அவளால்
திடீரென வந்து விட்டத் தும்மல்.
*
வாங்கிக் கொத்த வுடன் எக்காளம்
அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்து
தானும் உண்டான் மக்கா சோளம்.


ஆலமரங்கள்.

கவிஞர்.மித்ராவின் ஹைக்கூ கவிதைகள்
*
காற்றின் சிறகுகள்
முறிபடும் முட்களில்
வருந்தும் மேகம்.
*
மெல்ல நட குருவியே
உடைந்து விடப் போகிறது
புல்லில் பனித் துளி.
*
பழம் கோயில்களில்
நூற்றாண்டு கதை பேசும்
ஆலமரங்கள்.
*
இரவு முழுவதும்
தூங்க விடவில்லை
குயிலின் சோகம்.
*                     
பின்னிக் கிடக்கும்
சிலந்தி வலைச் சிக்கல்கள்
வாழ்க்கை.
*
பறி போனது
அணிலின் சுதந்திரம்
கிளைகளில் தேன் கூடு.



ஞாயிறு, 9 மார்ச், 2014

நீயே சொல்

ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்
*
காற்றில் மிதந்து வரும் மண் வாசனை
அணைத்த வுடன் வீசியது
குழந்தை மேல் பால் வாசனை.
*
சத்தியமாய் நீயே சொல்
உண்மைப் பேசாத
உன் மனமே பாராங்கல்
*
பேசியதையே பேசி
மீண்டும் பேசிப் பேசி

அறுக்கிறான் தொடர்ந்துப் பேசி.