புதன், 9 ஏப்ரல், 2014

தேர்தல் கவிதை.

கோடீஸ்வர வேட்பாளர்கள்
பட்டியல் வெளியிட்டது
தேர்தல் ஆணையம்.
*
எந்த மெனுவும்
தள்ளுபடி யில்லை
மனுதான் தள்ளுபடி. 
*
தேர்தல் களத்தில்
அனல் பறக்கிறது
பேச்சாளர்களின் பேச்சு.
*
கோயில் கட்டுவார்கள்
நிதானமாக வெட்டுவார்கள்
ஊழியர்கள் கோரிக்கைகள்.
*
நல்லாசி, நல்லாட்சி
பிறகு மெல்ல அரங்கேறும்
ஊழல் காட்சி.
*


திங்கள், 7 ஏப்ரல், 2014

கோடை கவிதைகள் {சென்ரியு}

*
குளிர்ச்சியாக
இருக்கிறது
இளநீர்
*
குண்டு குண்டாக
உருண்டு கிடக்கிறது
பாதையோரம் தர்பூசணி.
*
குளிர்சாதன அறையில் அமர்ந்து
ஒரு மணி நேரமாய்
குடிக்கிறார்கள் தேனீர்.
*
ஹெல்மெட் வழியே
வழிகிறது
துளித் துளியாய் வியர்வை.
*
*
ஒடி வந்து பஸ் ஏறிய
பயணியின் மேல்
எரிந்து விழுந்தார் கண்டக்டர்.
*
விசிறிக் கொண்டே
விற்கிறான்
பனைஒலை விசிறி.
 



ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தேர்தல் கவிதைகள்.


*
பஸ்பயணம், தண்ணீர் பாட்டில்
சாப்பாடுப் பொட்டலம்
பசியைத் தீர்த்தது தேர்தல்.
*
அதிகாரிகள்
அரசியல் பிரவேசம்
தொண்டர்கள் அச்சம்.
*
சிக்கன நடவடிக்கை
எருமை மீது பயணம் செய்து
வாக்கு சேகரித்தார் வேட்பாளர்.
*
கருத்துக் கணிப்பு
எல்லாக் கட்சியினரும்
எதிர்த்துப் புறக்கணிப்பு.
*
யார் யாருக்கு என்ன பலம்
தீர்மானிக்கிறது
தேர்தல் களம்.
*

வியாழன், 3 ஏப்ரல், 2014

ஆலமரம் {சென்ரியு }

*
 சுற்றிச் சுற்றி விளையாடும்
குழந்தைகளைப் பார்த்து சிரிக்கிறது
பெரிய ஆலமரம்.
*
குழந்தைகள் புத்தகம் படிக்கிறார்கள்
புத்தகம் குழந்தைகளைப் படிக்கிறது
வளரும் தென்னம்பிள்ளைகள்.
*
உணவே மாத்திரை
மாத்திரையே உணவு

உண்போமா ஆரோக்கிய உணவு.

இதழ் அறிமுகம் .



 அருவி ” – ஹைக்கூ சிறப்பிதழ்- 2014.
இதழ் எண்: 20. ஜன-பிப்-மார்ச்-2014.                                      ,
*
எழுத்தாளர்கள் சுஜாதா,பிரபஞ்சன், தமிழ்நாடன் ஆகியோரின்
ஹைக்கூ சிந்தனைகள். கொஞ்சம் மொழிபெயர்ப்புக் கவிதைகள்,
தமிழ் கவிஞர்கள் 120 பேரின் ஹைக்கூ கவிதைகள் இடம்
பெற்றுள்ளன. நூல் அறிமுகம், மதிப்புரைகள் வந்துள்ளது.
பழனி எழில்மாறன், தாமரைச்செல்வன், சூரியநிலா, பொன்.குமார்,
புலவர்.இரா.முத்தழகன் ஆகியோர், சென்ற இதழ் குறித்துக்
கருத்துரைத்துள்ளார்கள். இதழ் சிறப்பான தயாரிப்பில்
வெளிவந்துள்ளது. பாராட்டுக்குரியது.
 “ அருவி “ ஹைக்கூ சிறப்பிதழைப் படித்துப் பாருங்கள்.
நீங்களும் ஹைக்கூ எழுதத் தொடங்கி விடுவீர்கள்.
*
அன்புடன்,
ந.க. துறைவன்
வேலூர்- 632 009.
செல் எண் 9442234822 / 8903905822

  

முகவரி...!! {ஹைபுன் }


*
தெருவில் யாரோ ஒருத்தர் முகவரி தெரியாமல்
விசாரித்துக் கொண்டிருந்தார். அங்கு நின்றிருந்தவர்
அவரிடம் இருந்த அட்டையை வாங்கிப் பார்த்தார்.
” நீங்க தெரு மாறி வந்துள்ளீர்கள் “ என்றார் அவர்.
“ இந்த முகவரி எங்கிருக்கிறது” என்று மீண்டும் விசாரித்தார்
வந்த மனிதர். அகன்ற தெருக்கள், வீட்டு எண்கள்,பெயர் பலகைகள்
தமிழ் ஆங்கிலத்தில் இருக்கின்றன. என்னதான் படித்தவர்கள்
படித்தும் படிக்காதவர்கள் படிக்காமலும் இருந்தாலும்
எவரையேனும் கேட்டுத்தான் தேடியலைந்துக் கண்டுப்
பிடிக்க வேண்டியிருக்கிறது.முகவரி.
*
முகவரி எப்படித் தெரியும்?
வேடந்தாங்கல் எப்படி வந்தது?
வெளி நாட்டுப் பறவைகள்.

*..

புதன், 2 ஏப்ரல், 2014

இதழ் அறிமுகம்.
*
 “கவிச் சூரியன்”
 ஐக்கூ மின் இதழ்-எண்: 13. பக்கம்-05.
ஏப்ரல்-01-04-2014 to 15-04-2014.
இந்த இதழில்
சர்வதேச தினங்கள்
1. உலகப் பாரம்பரிய தினம்
2. உலகக் கடல் தினம்
3. உலகச் சுகாதார தினம்
4.உலக பூமி தினம்
இவைச் சார்ந்த ஹைக்கூ கவிதைகளும், மற்றும்இயற்கைச்
 சுற்றுச் சூழல் சார்ந்த ஹைக்கூ கவிதைகளும், ஹைக்கூ
ஓலை, ஹைக்கூ மேடை, கவியருவி இரமேஷின் “ பனித்
துளியில் பனைமரம் “, “ சந்திரமனோகரனின் “ உதிரும் மௌனம் “
ஆகிய இருநூல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த “மின் ஐக்கூ இதழ்- படித்து பயன் பெறுங்கள்.
தொடர்புக்கு:
திரு. கண்ணன்சேகர்
திமிரி
அன்புடன்,
ந.க.துறைவன்
வேலூர்- 632 009.
E.Mail;- poetthuraivan@gmail,com
Cell No. 9442234822.