புதன், 16 ஏப்ரல், 2014

ந.க. துறைவன் ஹைபுன் கவிதை.

தரை இறங்கும் ஹெலிகேப்டர்…! {ஹைபுன் }
*
ஆரத்தி எடுத்தப் பெண்கள்
ஆக்ரோஷமாய் கத்தினார்கள்
பணம் பட்டுவாடா தகராறு.
*
புதுசா என்ன இலவசம்?
அறிவிப்பு வருமென்று
எதிர்பார்த்தார்கள் ஏழைகள்.
*
ஹெலிகேப்டர் இறங்க இறங்க
தலைஎணங்கி நிற்கிறார்கள்
தன்மானத் தமிழர்கள்.
*
சின்னங்களை வரவழைத்து
மாஜிக் காட்டினான்
வியந்துப் பார்க்கிறது கூட்டம்.
*
இந்திய வாக்காளர் பட்டியல்
சிறந்தத் தொகுப்பாக
கின்னஸ் தேர்வு.
*


அலைந்தபடியே இன்றும்...!! {ஹைபுன் }


*
ஆடு மாடுகள் மற்றும் விலங்கினங்கள் மேய்வதற்கு
விளைநிலங்கள் குறைந்து விட்டன. நீர்நிலைகள்
காணாமலேயே போய்விட்டன. குளங்கள் தூர்ந்து
மறைந்து விட்டன ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன
கிராமங்களில் மாடுகள் வளர்ப்பவர்கள் மலிந்து
விட்டார்கள். நகரங்களில் மாடுகள் வீதிகளில் தான்
மேய்ந்துக் காணப்படுகின்றன. சில நேரங்களில்
போக்குவரத்தையே ஸ்தம்பிபக்க வைக்கும் ஜீவராசிகள்
எல்லாம் நீர்நிலைகளைத் தேடித் தேடி அலைந்தபடியே
இன்னும்….!!.
*
வறட்சி நிலை
விவசாயம் முடங்கி விட்டது
நோயில் நீரில்லா நிலங்கள்.
*


திங்கள், 14 ஏப்ரல், 2014

அழகான தும்பிகள்...!!

*
அவசரமாகப் பறக்கின்றன
ராணுவ ஹெலிகேப்டர்கள்
அழகானத் தும்பிகள்.
*
நிமிர்ந்துப் பார்த்து விட்டது
தோழியைத் தேடி ஒடுகிறது
வேலி தாண்டி ஓணான்.
*
விரும்பி வாங்கினார் விலைக்கு
தாயிடமிருந்துப் பிரித்து
புசுபுசுப் பூனைக் குட்டி.
*
முகம் அறியாத நண்பர்கள்
சந்தோஷமாகப் பேசிக் கொண்டனர்
கோயில் வாசலில் காலணிகள்.

*

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

" ஜய " தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


*
ஜய ஜயமென
ஜயமாகி வருக
ஜய வருடமே…!!
*
ஜயமாகி ஜயிக்க
ஜயமெனக்கு தருக
ஜய வருடமே…!!
*
ஜயமென ஜபிப்போர்க்கு
ஜயமளிக்க வருக
ஜய வருடமே…!!
*
ஜயமென ஜகமெலாம்
ஜய ஜய வென்று வெல்க
ஜய வருடமே…!!
*
ஜயமென அன்பு பெருக
ஜயமென கருணை பொழிக
ஜய வருடமே…!!
*
ஜயமென தனம் பெருக
ஜயமென நலம்  தருக
ஜய வருடமே வருக….வருக…!!
*
அன்புடன்,
ந.க. துறைவன்
பிளாட் எண்: 20,
வசந்தம் நகர் விரிவு,
பேஸ்—3, சத்துவாச்சாரி,
வேலூர்—632 009.
செல் :- 9442234822 / 8903905822.

  

 


பெருங்கள்வன் { பரேகு கவிதை }

குடும்பஸ்தன் உள்ளத்தில் துறவு
ஞானியின் உள்ளத்தில காமம்
உள்ளம் ஒரு பெருங் கள்வன்.
*
நெருங்கி உரசிக் கொண்டன
சிக்கி முக்கிக் கற்கள்
பிறந்தது காதல் 
*
“ மணியாட்டிக்கிட்டு
எங்கடா போறே “ என்றாள் கிழவி
தெருவில் நிர்வாணச் சிறுவன்.

*

சனி, 12 ஏப்ரல், 2014

கோடை கவிதைகள்.

புங்க இலை மறைப்பில்
குளிர்ச்சியா யிருக்கிறது
கூடை நிறைய  நுங்கு
*
பதனீர் விற்பவள்
முகத்தில் வழிகிறது
முத்து முத்தாய் வியர்வை.
*
அரைமணிக் கொரு தரம்
குளிக்க வைக்கிறாள்
சலித்துக் கொள்கிறது பூக்கள்.
*
கோடை வெப்பம்
வாய்க்கால் நீரில்
குளிக்கின்றன வாத்துக்கள்.
*
குளிப்பதற்கு நீரில்லை
தவித்து நடக்கின்றன
கூட்டமாய் எருமைகள்.

*

வியாழன், 10 ஏப்ரல், 2014

வலி தாங்காமல...

வலி தாங்காமல்
கதறி அழுகிறது
காதல் கவிதைகள்.
*
எங்கெங்கோ தேடிக் கண்டுபிடித்தான்
பெட்டிக்குள்ளிருந்தது
காணாமல் போன விமானம்..
*
யாரேனும் கொஞ்சம்
சிரித்துக் காட்ட முடியுமா?
அகம்பாவச் சிரிப்பு.
*
கோடைத் தாகமோ?
தண்ணீர் இல்லாதத்
தொட்டியின் மீது காகம்.
*
கிருஷ்ணர் வேஷம் போட்டு
அழகு பார்த்தார்கள்
மொட்டை அடிக்கும் முன்…!

*