செவ்வாய், 19 மே, 2015

மின்மினிகள்...!! [ ஹைக்கூ ]

*
யாரைத் தேடுகின்றன?
அந்த இருட்டில்
மின்மினிப் பூச்சஜகள்.
*


திங்கள், 18 மே, 2015

தலையணை....! [ சென்ரியு ]

எல்லோரின் கோபத்தை
ஏற்றுக் கொள்கின்றது
வெறுக்காது தலையணை.
*


நேரம்...!! [ HAIKU / ஹைக்கூ [

*
காத்திருக்கிறார்கள் எல்லோரும்
யாருக்காகவும் 
காத்திருப்பதில்லை நேரம்.
*

செவ்வாய், 5 மே, 2015

இனிப்பு....!!

*
கசப்பாக இருந்தாலும்
இனிக்கவே செய்யும்
வாழ்க்கை.
*

நாய்...!!

*
காத்திருக்கிறேன் வெகுநேரமாய்
பரிதாபமாய் பார்த்தது
அருகில் வந்து நின்ற நாய்.
*

திங்கள், 4 மே, 2015

கதவு....!! [ SENRYU / சென்ரியு ]

*
உள்ளே நின்றிருந்தவளை
பளிச்சென்று காட்டியது
தாளிடாதக் கதவு.
*

தேனீர்...!! [ HAIKU / ஹைக்கூ }

*
பேசிக் கொண்டே பருகினோம்
இருவரும்
கவிதைத் தேனீர்.
*