ஞாயிறு, 7 ஜூன், 2015

தேடல்...!! [ HAIBUN / ஹைபுன். ]


*
எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேடிக் கொண்டேயிருந்தான். எங்கு வைத்தோமென்று யோசித்துப் பார்த்தான். கவனத்திற்கு வரவில்லை ஞாபக மறதி வந்துவிட்டதோ என்று பயந்தான். பயம் பல நேரங்களில் மனிதர்களை பயமுறுத்திப் பார்க்கும். பயந்தவர்கள் யாரும் தைரியசாலிகள் இல்லையா என்ன?. முக்கியமான பொருள் என்பதால் மனதில் பதட்டம் அதிகரித்தது. எப்படியும் கிடைத்துவிடும் என்ற உறுதியோடு தேடினான். பளிச்சென்று ஞாபகம் வந்துவிட்டது. அங்கே போய் பார்த்தான். பொருள் வைத்த இடத்திலேயே பத்திரமாக இருந்தது. சிக்கலானப் பிரச்சினையிலிருந்து தப்பித்தோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.
தேடுவது்மில்லை தொலைப்பதுமில்லை
எந்தவொரு பொருளும் கைவசமில்லை
சேமித்து வாழத் தெரியாதப் பறவைகள்.

*

சனி, 6 ஜூன், 2015

கலப்பு...!! [ டIMARAIKU / லிமரைக்கூ ]


*
நதிகளில் கழிவுநீர் கலப்பு
கங்கை காவிரியில் மக்கள்
புனிதநீர் முக்குளிப்பு.

*

மதிப்பெண்...!! [ HAIBUN / ஹைபுன் ]


பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு, +2 வகுப்பு பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கின்றது. பாராட்டலாம். இந்த தேர்ச்சி எப்படிப்பட்து என்புது தான் கேள்வி. மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்து, அதை அப்படியே பரிட்சையில் பதிவு செய்ய வைப்பது ஒரு தேர்வா?  மனனம் செய்து எழுதியதை விடைத்தாள்கள் திருத்துபவர்கள் எப்படி முழுமையான சரியான விடையென்று மதிப்பெண் அளிக்கின்றார்கள்? அரசும் இதை எப்படி சரியானமுறையென்று அதிக மதிப்பெண் அள்ளிக் கொடுக்க அனுமதியளிக்கின்றது. இது தான் கல்விமுறையா?
அறிவிற்கு அளிக்கவில்லை
மனப்பாடத்திற்குத்தான்
அள்ளி வழங்கியது மதிப்பெண்.

*

நூடுல்ஸ்....!! [ SENRYU / சென்ரியு ]

*
நூடுல்ஸ் குர்க்கூரே மேகி
வியாபாரம் நொடிந்து விட்டதென
கடைக்காரர்கள் ஒப்பாரி.
*

வெள்ளி, 5 ஜூன், 2015

மயில்...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
ஆடிக் களித்தக் களைப்பு
நாகலிங்க மரத்தில்
உறங்குகிறது மயில்.
* 

சிறியதாய் உலகம்...!! [ SENRYU / சென்ரியு ]

*
தொழில்நுட்பம்
உலகைச் சுருக்கி விட்டது
ஹைக்கூகவிதையாய்…

*

வியாழன், 4 ஜூன், 2015

எங்கே...!! [ ஹைக்கூ ]

*
எங்கே தொடங்குகின்றது
அறிய முடிகின்றதா?
அறிவின் பிறப்பிடம்.
*