வெள்ளி, 25 நவம்பர், 2016

பூசணிப்பூக்கள்...!!

Haiku – Tamil / English.

ஏழையின் குடிசை அருகில் பூத்து
ஏழ்மையை நேசிக்கும்
மஞ்சள் பூசணி பூக்கள்.
*
Poor's cottage near Booth
Misery loves
Yellow pumpkin flowers.

வியாழன், 24 நவம்பர், 2016

கிலி..!! ( லிமரைக்கூ )



வெளியிலே புலி வீட்டிலே எலி
யாராச்சும் கேள்விக் கேட்டா?
மனசுக்குள்ளே ஓரே கிலி.

*

வெள்ளி, 18 நவம்பர், 2016

கொக்குகள்... ( ஹைக்கூ )


மலைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
பிரபஞ்ச செயல்களைக் கவனிக்கிறது
அசையாமல் உயர்ந்து நின்று
அமைதியான மலை சிகரங்கள்.

Listening to the Universe works
Stands Still Rising
Quiet mountain peaks.

*

புதன், 16 நவம்பர், 2016

பஞ்ச பூதங்கள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.

பஞ்ச பூதங்களுக்கு நடக்கும்
பூசை  தரிசிக்கிறார்கள்
பஞ்ச பூத மனிதர்கள்.

Will happen to the five elements
Repeat behold
Five dead men.

*

வெள்ளி, 28 அக்டோபர், 2016

பரிமாற்றம்...!! ( ஹைபுன் )

பரிமாற்றம்.

தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் பெரும்பான்மையானது, தமிழர் கலாச்சாரத்திற்குப் புறம்பான அன்னியர்களின் கலாச்சார விழாக்களாகத் தானிருக்கிறது. அதையே தன்னுடைய விழாவாகக் கருதி பின்பற்றி கொண்டாடி மகிழ்கிறார்கள். நவீன மேலைநாகரீகம். இந்திய மொழி பேசும் மக்களின் கலாச்சாரப் பண்பாடுகள் புரிந்துக் கொள்ளாமை. மதத் தத்துவங்கள் சொல்லும் ஆசார நியதி நியமங்கள் என பலவற்றில் சிக்கிக் கொண்டமையே இதற்கு காரணம் என்றே சொல்லலாம். கொண்டாடப்படும் விழாக்கள் எல்லாம் தற்போது மதவிழாக்களாக மாறி வன்நெறி கலாச்சாரத் திருவிழாக்களாக மாறிவிட்டன.

கலாச்சாரத்தின் வெளிப்பாடு
அன்பு பரிமாற்றம் உறவின் நேசம்
நல்லிணக்கத்தின் விழிப்புணர்வு.


*