செவ்வாய், 13 டிசம்பர், 2016

கால அளவு...!! ( ஜென் கதை )





ஜென் குரு ஒருவர், தனது சீடர்களிடம் “ நமது வாழ்க்கையின் கால அளவு என்ன? ” என்று ஒரு முறை கேட்டார்.
அதற்கு சீடர்களிடமிருந்து “ ஐம்பது வருடங்கள், எழுபது வருடங்கள், நூறு வருடங்கள் “ என பல்வேறு பதில்கள் கிடைத்தன. ஒவ்வொன்றிற்கும்
 “ இல்லை, தவறு ” என்பதையே பதிலாக கூறினார் குரு.
இறுதியாக, “ இரண்டு சுவாசங்களுக்கு இடைப்பட்ட காலமே, நமது வாழ்க்கையின் கால அளவு என்றார் குரு.
ஆதாரம்  தி இந்து – வணிகநூலகம்  பகுதி – 02-11-2016.
தகவல் . ந.க.துறைவன்.

*

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

கார்த்திகை தீபம் ( ஹைபுன் )




கார்த்திகை தீபம்.

கார்த்திகை மாதத்தில்தான் நாம் மலைகள் பற்றி நினைவுப்படுத்திக் கொள்கிறோம். நாம் எப்பொழுதும் மலைகளின் நேரடிப் பார்வையில் வாழ்கின்றோம். நாம் இல்லையென்றாலும், மலைகள், பிரபஞ்சம் இருக்கும் வரை உயிர்வாழும் தன்மைப் படைத்தவைகள். இயற்கை உபாதைகளால் அவைகளுக்கு ஊறுநேரும் போதுதான் வெடித்துச் சிதறி உயிரிழக்க நேரிடலாம்.  மக்கள் வளமாக வாழ்வதற்கு அவைகள் மழை தருவதற்கும் இன்னும் பிற வளங்கள் தருவதற்கும் உதவிகரமாக விளங்குகின்றன.
இன்னும் எவ்வளவோ வழிகளில்
வளம்தரும் கருப்பு சுரங்கம்
மக்கள் நேசிக்கும் மலைகள்.

*

வியாழன், 8 டிசம்பர், 2016

சேமிப்பு...!! ( சென்ரியு )




எல்லா ஆசைக் கனவுகளை
எப்பொழுதும் வங்கி சேமிப்பில்
நிரப்பி கொண்டேயிருக்கிறது மனம்.

*

சனி, 3 டிசம்பர், 2016

கோரிக்கை..!! ( சென்ரியு )

Senryu – Tamil / English.

செல்லக் குழந்தையின்
சிரிப்பில் இருக்கிறது
தேவையான கோரிக்கை.
*
The baby's
There's smile
The request.

N.G.Thuraivan.

வியாழன், 1 டிசம்பர், 2016

வயல்...!! ( சென்ரியு )

வயல் நாற்றாங்காலோடு
ஒட்டியிருக்கிறது

விவசாயியின் வாழ்க்கை

ந.க.துறைவன்.. 

புதன், 30 நவம்பர், 2016

நித்தியக்கல்யாணி...!! ( ஹைபுன் )



குழந்தைகள் தனக்கு தேவையான ஆடைகளைத் தானே தேர்வு செய்துக் கொள்கின்றனர். அம்மாவோ அப்பாவோ தேர்வு செய்யும் ஆடைகளை நிராகரிக்கவே செய்கின்றனர். அதற்காக அடம்பிடிக்கவும் செய்கின்றனர். குழந்தைகள் தனக்கான சுதந்திரத்தை உரிமையை விட்டுக் கொடுக்காமல் செயல்படுகின்றனர். இந்த பிடிவாத குணம் நல்லதா? கெட்டதா? என்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. குழந்தைகளின் இப்பிடிவாதப் போக்கை விட்டுப் பிடித்து கவனித்து வரவேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். இப்போக்கு எதிர்காலத்தில் பின்விளைவுகளை எற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.

மரத்தின் நிழலில் வளர்ந்தது
கர்வமில்லாமல் பாதுகாப்பாய்
நித்திய கல்யாணி செடிகள்.

*

திங்கள், 28 நவம்பர், 2016

இருப்பு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
உனக்குள் எதுவுமில்லை
ஆனாலும்,
எல்லாமே இருக்கிறது.

There is nothing in you
However,
Everything.

*