சனி, 26 ஜனவரி, 2019

தேடல்

உயிரற்ற மரக் கிளை அமர்ந்து
ஏகாந்த பெருவெளி நோக்கி
பறவைகள் ஞானத் தேடல்.


ஞாயிறு, 20 ஜனவரி, 2019

வெறுமை

வெறுமை

1.
மௌனமே மாறாக ஒன்று
வாழ்க்கை நிலையானதன்று.
2.
மலை உச்சியில் நிலா
சிவன் தலையில் கங்கை
என்னுள் குண்டலினி சக்தி.
3.
சித்தர்கள் மௌனம் கலைந்தது
பறவைகள் இடம் பெயர்ந்தன
பௌர்ணமி கிரிவலம் நெரிசல்.
4.
குரு இல்லை
சீடர்கள் இல்லை
வெறுமையாய் குகை.
5.
குரு ஆற்றுகிறார் நீண்ட உரை
சீடர்கள் மௌனமாய் கேட்கிறார்கள்
அரசமரத்தில் கிளிகள் கீச்கீச்.

ந க துறைவன்.


சில தெரிப்புகள்


ஞாயிறு, 6 ஜனவரி, 2019

வெள்ளி, 4 ஜனவரி, 2019

திங்கள், 24 டிசம்பர், 2018

தியானம்

தினமும் சூரிய நமஸ்காரம்
பயிற்சி செய்கிறது தவறாமல்
முள்வேலி மேல் ஓணான்.

ந க துறைவன்.


தியானம் பயிற்சி


சனி, 22 டிசம்பர், 2018

அனேகம்

சிவனே என்று உள்நினைந்து
சும்மா கிடந்த எனைத்
துரத்துகின்றன தொல்லைகள் அனேகம்.

ந க துறைவன்.


தொல்லைகள்