காணாமல் போய் விட்டது
கூடைக்குள்
மூடி வைத்துக் கோழி.
ந க துறைவன்.
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
காணாமல் போய் விட்டது
கூடைக்குள்
மூடி வைத்துக் கோழி.
ந க துறைவன்.
விளைச்சல் இல்லாத நிலம்
நீரோட்டமில்லாத ஆற்றின் அருகே
கடந்து போகின்றன வாகனங்கள்.
ந க துறைவன்.
வாழ்க்கை வெறுமை
மலையும் வாழ்வும் என்றும்
இதயத்தில் எத்தனை பொற்கனவுகள்
இலையுதிர் காலக் காற்று.
ந க துறைவன்.
பொற் கனவுகள்
சுவரில் தைல வண்ண ஓவியம்
வரைந்த ஓவியர் பெயரில்லை
தாத்தாவின் நினைவுப் பொருளாய்...
ந க துறைவன்.
நினைவுப் பொருளாய்...
பூச்சி இனங்கள் மெல்ல
அழித்து வருகின்றன வயல் வெளியில்
பூச்சிக்கொல்லி மருந்துகள்.
ந க துறைவன்.
பூச்சி இனங்கள் அழிவு
மனதை எரித்தது தீயென
நிதானமற்று கோபமாய்
பேசிய சுடு சொற்கள்.
ந க துறைவன்.
சுடு சொற்கள்
சொந்தமென ஏதுமில்லை
சில நேர அமைதியும்
சில நேர குளிர்ச்சியும்...
ந க துறைவன்