சனி, 9 மார்ச், 2019

கோடை

கோடை காலம் வருகை

ஓராண்டு கூடியது வயது

பூத்துக் குலுங்கும் வேப்பம்பூ கண்கள்.

ந க துறைவன்.

தவளைகள்

1. மழைத் துளிகள் உடலில் பட்டதும் சிலிர்த்து எழுந்தன நீரின்றி வாடிய தவளைகள். 2. தவளைகள் நீண்ட உரையாடல் மகிழ்ச்சி ஆரவாரம் மழைக் குறித்து விமர்சனம். 3. எத்தனை நாளாச்சு? ஆரோக்கியமாய் குளிச்சி மழைநீரில் மரங்கள். 4. நிலவொளி அற்ற இரவு வெளியெங்கும் மழை இரைச்சல் வாகனங்கள் பாய்ச்சும் ஒளி. 5. மழைக்கு ஒதுங்க இடம் தேடி அலைகின்றன தெரு நாய்கள். ந க துறைவன்.

கோழி

காணாமல் போய் விட்டது

கூடைக்குள்

மூடி வைத்துக் கோழி.

ந க துறைவன்.

சனி, 9 பிப்ரவரி, 2019

இழப்பு

விளைச்சல் இல்லாத நிலம்
நீரோட்டமில்லாத ஆற்றின் அருகே
கடந்து போகின்றன வாகனங்கள்.

ந க துறைவன்.


வாழ்க்கை வெறுமை


வியாழன், 7 பிப்ரவரி, 2019

காற்று

மலையும் வாழ்வும் என்றும்
இதயத்தில் எத்தனை பொற்கனவுகள்
இலையுதிர் காலக் காற்று.

ந க துறைவன்.


பொற் கனவுகள்


திங்கள், 4 பிப்ரவரி, 2019

ஓவியம்

சுவரில் தைல வண்ண ஓவியம்
வரைந்த ஓவியர் பெயரில்லை
தாத்தாவின் நினைவுப் பொருளாய்...

ந க துறைவன்.


நினைவுப் பொருளாய்...


வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

பூச்சிக்கொல்லி

பூச்சி இனங்கள் மெல்ல
அழித்து வருகின்றன வயல் வெளியில்
பூச்சிக்கொல்லி மருந்துகள்.

ந க துறைவன்.


பூச்சி இனங்கள் அழிவு