சனி, 23 மார்ச், 2019

அலைதல்

நீர்நிலைத் தேடி அலைதல் நிழல் தேடி தூரப் பறத்தல் எங்கும் வெப்பம் உணர்த்தப் பறவைகள். ந க துறைவன்.

புதன், 20 மார்ச், 2019

அன்பு

அன்பு காட்டுபவர்கள் குறைவு

வெறுப்பு விதைப்பவர்கள் அதிகம்

ந க துறைவன்

ஞாயிறு, 17 மார்ச், 2019

நந்தி

நந்தியின் காதில் ரகசியமாய் பிரார்த்தனை சொல்லி முறையிட்டாள் மௌனமாய் கேட்டார் மீண்டும் அடுத்தொருவள்வந்து காதில் முணுமுணுத்தாள் நந்தி சலிக்காமல் கேட்டார் எல்லோரும் தொந்தரவு செய்வதறிந்து கம்பி வேலிப்போட்டு சிறைப்படுத்தி விட்டனர் நந்திதேவனை இப்பொழுது நிம்மதியாய் நந்தி... ந க துறைவன்.

வியாழன், 14 மார்ச், 2019

ஓய்வு

ஓய்வு நாளில் ஓய்வறியாதவள்

ஓய்வு எடுக்க நினைத்தாள்

ஓய்வு எடுக்க விடவில்லை ஓய்வு.

ந க துறைவன்.

சனி, 9 மார்ச், 2019

கோடை

கோடை காலம் வருகை

ஓராண்டு கூடியது வயது

பூத்துக் குலுங்கும் வேப்பம்பூ கண்கள்.

ந க துறைவன்.

தவளைகள்

1. மழைத் துளிகள் உடலில் பட்டதும் சிலிர்த்து எழுந்தன நீரின்றி வாடிய தவளைகள். 2. தவளைகள் நீண்ட உரையாடல் மகிழ்ச்சி ஆரவாரம் மழைக் குறித்து விமர்சனம். 3. எத்தனை நாளாச்சு? ஆரோக்கியமாய் குளிச்சி மழைநீரில் மரங்கள். 4. நிலவொளி அற்ற இரவு வெளியெங்கும் மழை இரைச்சல் வாகனங்கள் பாய்ச்சும் ஒளி. 5. மழைக்கு ஒதுங்க இடம் தேடி அலைகின்றன தெரு நாய்கள். ந க துறைவன்.

கோழி

காணாமல் போய் விட்டது

கூடைக்குள்

மூடி வைத்துக் கோழி.

ந க துறைவன்.