பித்தன் சித்தி அடைந்தான்
அது இப்பொழுது பக்தர்கள்
வழிபடும் சித்தர் சமாதி.
ந க துறைவன்.
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
பித்தன் சித்தி அடைந்தான்
அது இப்பொழுது பக்தர்கள்
வழிபடும் சித்தர் சமாதி.
ந க துறைவன்.
ஹைக்கூவிழிப்பு 1. உபதேசமற்ற மௌனம் ஆழ்ந்த விழிகளில் விழிப்பு சூன்யவெளிக்கு அப்பால் மனம். 2. அரச இலைகள் அசைந்து அசைந்து பௌர்ணமி நிலவொளி நிழல் புத்தனின் மௌனம் எங்கும் வியாபித்து... 3. யாருமில்லாத குகைக்குள் யாரோ இருந்தார்கள் இன்றுவரை அங்கு யாருமில்லை. 4. நேற்று என்னைக் காண வந்தார் அப்பொழுது அங்கில்லை நான் இன்று வருவாரோ புத்தன். ந க துறைவன்.
சித்திரா பௌர்ணமி நாளில்
சித்ரகுப்தன் சந்நதியில் ஆஜராகி
மக்கள் தரிசனம்.
இன்று சித்ரகுப்தன் ஓய்வாய்
கணக்கு எழுதுவதை நிறுத்திவிட்டு
மக்களை ஆசிர்வாதிக்கிறார் மௌனமாய்...
ந க துறைவன்.
பூ, காய், பழமென
வேம்பு பூத்துக்குலுங்குகிறது
தமிழ் புத்தாண்டு வரவேற்று...
ந க துறைவன்.
இன்றைய எட்டு வழிச் சாலைகள்
கடந்த கால மனிதன் நடந்து
பழகிய ஒற்றையடி பாதை.
ந க துறைவன்.
வாழ்க்கைக்குள் ஆசை
உயிருக்குள் மரணம்
கடைசியில் பயணம்.
ந க துறைவன்.