ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
லேபிள்கள்
- அஞசலி... (5)
- அறிமுகம் (1)
- இரு வரி கவிதை (1)
- இருவரி கவிதை (1)
- இருவரி கவிதைகள் (2)
- கட்டுரை (5)
- கருத்து (4)
- கவிதை (38)
- கவிதை. (1)
- கவிதைகள் (5)
- குக்கூ (1)
- குறுங்கவிதை. (1)
- குறுங்கவிதைகள் (1)
- சென்ரியு (122)
- சென்ரியு. (40)
- துணுக்கு (3)
- நல்ல நாள் (1)
- நூல் அறிமுகம். (15)
- நூல் விமர்சனம் (1)
- படம் (14)
- பரேகு ஹைக்கூ (4)
- புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)
- புதுக் கவிதை (1)
- புதுக் கவிதைகள் (1)
- பொங்கல் நல்வாழ்த்துக்கள் (1)
- மினி கவிதை (5)
- மினி கவிதைகள் (5)
- லிமரைக்கூ (16)
- வாழ்த்து. (1)
- வாழ்த்துக்கள் (17)
- ஜென் (2)
- ஜென் கதை (1)
- ஜென்கதை (4)
- ஹைக்கூ (394)
- ஹைக்கூ கவிதை (16)
- ஹைக்கூ கவிதைகள் (18)
- ஹைக்கூ கவிதைகள். (2)
- ஹைக்கூ. (76)
- ஹைபுன் (42)
- ஹைபுன் கவிதைகள் (1)
- HaiKu (5)
- Haiku. (1)
- Quotes (2)
வெள்ளி, 21 ஜூன், 2019
நறுமணம்
நறுமணம்
ஈசனின் கீழ் நோக்கு பார்வை
சக்தி சிரித்தாள்
அறையில் காமச் சாம்பிராணி புகை.
*
லிங்கம் வணங்கி எழுந்தாள்
சிவன் விழித்தான்
நாரதன் குரல் வெளியில்...
ந க துறைவன்.
திங்கள், 17 ஜூன், 2019
பிறை
பிறை
வயல் காட்டில் வாழ்ந்தார்
வைரமாய் உடல் வளர்ந்தார்
ஆயிரம் பிறை கண்ட தாத்தா.
ந க துறைவன்.
வெள்ளி, 7 ஜூன், 2019
கட்டைவிரல்
துரோணர் இறுதி மூச்சு
நாசியைத் தொட்டு விலகுகிறது
ஏகலைவன் கட்டைவிரல்.
ந க துறைவன்.
வியாழன், 6 ஜூன், 2019
பிரச்சினைகள்
பலூன்களாய் வெடிக்கின்றன
சில பிரச்சினைகள்
சில நேரங்களில்
சில மனிதர்களால்
எதிர்ப்பாராமல்...
ந க துறைவன்
ஞாயிறு, 2 ஜூன், 2019
இசை
இசை
இசையின் அதிர்வலைகள்
உணர்கின்றன மௌனமாய்
என்னை அறியாத ஆன்மா.
+
ஆற்று நீரின் இசை
மீன்கள் ரசிகர்கள் கூட்டம்
கூழாங்கற்கள் ஆழ்ந்த தியானம்.
ந க துறைவன்.
வெள்ளி, 24 மே, 2019
குளம்
மஞ்சள் வெயில் உக்கிரம்
கடந்து செல்கிறது மேற்கே
விகசித்து ஒரு ஒற்றை பறவை.
பாழடைந்த குளம்
காய்ந்து வறண்டிருக்கிறது
மேலே இறந்த தவளை தோல்கள்.
ந க துறைவன்.
புதன், 8 மே, 2019
பித்தன்
பித்தன் சித்தி அடைந்தான்
அது இப்பொழுது பக்தர்கள்
வழிபடும் சித்தர் சமாதி.
ந க துறைவன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)