செவ்வாய், 15 அக்டோபர், 2019

உறவு

*
உறவு { ஹைபுன் / HAIBUN }.
*
வீடு, பூட்டியிருந்தது. “ எங்கே போயிருக்கிறார்கள் ” என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தரார். “ தெரியலேயே சார், எங்கே போறேன்னு யாரிடம் சொல்லிட்டுப் போறாங்க ” என்று கொஞ்சம் கடுப்பாகவே பதில் சொன்னார். அவருக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ‘ நன்றி சார் ‘ என்று சொல்லிவிட்டு நகர்ந்தவர், பக்கத்திலிருந்த மரத்தடியின் அடியில் ஒதுங்கி நின்றார்.
*
பக்கத்து வீட்டுக்காரன் பகை
எதிர் வீட்டுக்காரன் நண்பன்
உறவுக்கு கைகொடுக்கிறது மரங்கள்.

*  

அறிமுகம்

*
ஐக்கூ மின் இதழ் அறிமுகம்.
*
“ கவிச் சூரியன் ” – ஐக்கூ மின் இதழ்
மே – 16-31 – 2014.
*
இவ்விதழில், சர்வ தேச தினங்களான
1. உலகப் புகையிலை எதிர்ப்பு தினம்.
2. உலகத் தொலைத்தொடர்பு தினம்.
3. உலகத் தொழுநோயாளர் தினம்.
4. வன்முறை எதிர்ப்பு தினம்.
*
ஆகியவற்றைச் சார்ந்த ஐக்கூ கவிதைகள், கவிஞர்களின் கண்ணோட்டத்தில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அரசியல் மாற்றத்தினை வரவேற்று, தனது கருத்தினை நம்பிக்கையோடு முன் வைத்துள்ளார் ஆசிரியர்.
கவிவேந்தர். வேழவேந்தன், நூல் அறிமுகம், சுவடுகள், எண்ணக்கதிர்கள் பகுதிகள் சிறப்பாகவிருக்கின்றன. “ கவிச் சூரியன் ” –16-31- மே- 2014 ஐக்கூ மின் இதழ் தயாரிப்புப் பணி மிக மிக நேர்த்தியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.  
*
பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்.. 
*
நன்றியுடன்,
ந.க. துறைவன், வேலூர் – 632 009.
செல் : 9442234822 / 8903905822.
*


பூமி

*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-


ஞானம்

மூதாதையர்க்குத் தெரிந்தது மண்கலம்
இளந் தலைமுறைக்குத் தெரிந்தது
விஞ்ஞானச் சாதனம் விண்கலம்.
*
வீதியில் ஒரே பரபரப்பு
சாதிக் கலவரம் சூழ்ந்த நகரம்
பீதியில் கடையடைப்பு.
*
மனிதருக்குப் பிடித்தது மதுபானம்
போதையிலே பிறந்தது சிலருக்கு
கவிதை மெய் ஞானம்.
- ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்

*

வாசிப்பு

ஆழ்ந்தப் புத்தக வாசிப்பு
வரிகளின் வசீகரிப்பு
இடையிடையே புன்சிரிப்பு.
*
பெண்ணின் கண்ணீராய்
சொட்டிக் கொண்டிருந்தது
தெருக் குழாய்.
*
கைக் கூடி வந்த பின்
எதையோ செய்யத் தூண்டுகிறது
ஏதோவொரு அதீத நினைப்பு.
- ந.க. துறைவன் ஹைக்கூக்கள்.

*

ஒட்டச்சிவிங்கிகள்

ஒட்டகச்சிவிங்கிகள்….!!
*
தொலைவில் வருகின்றன
கூட்டமாய் ஒட்டகச்சிவிங்கிகள்
ஈச்சமரங்களுக்கு அச்சம்.
*
வெளியே முள் உள்ளே பழம்
ஆசையோடு வாங்குகிறார்கள்
அன்னாசிப் பழம்
*
வயோதிகம் பற்றி அறியுமோ?
ஆயிரங்காலமாய் வளர்ந்து நிற்கும்
கற்பக விருட்சங்கள்.

*

மனம்

N.G. THURAIVAN'S HAIKU. 
பார்வை எதிலோ லயித்திருந்தது
எதையோ நினைக்கிறது மனம்
சுடர்விடும் சிந்தனையில் சூரியன்.
*
எதிர்ப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்
ஏமாந்தவர்களுக்கு பதற்றம்
சலசலத்து ஒடுகிறது ஆற்றுநீர்.
*
இன்னும் எவரொருவராலும்
முழுமையாக எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான பதில்.

*