புதன், 31 ஆகஸ்ட், 2016

உணர்வுகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
சொல்லத் தெரியாத உணர்வுகள்
உள்ளே பதுங்கி இருக்கிறது
பாய்ந்தோடுகிறது முயல்குட்டி.
*
Feelings do not tell
Have sneaked in
Bunny and flows.

*

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

வனம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வனத்தில் சீதை, தேடலில் ராமன்
ஆட்சியில் பரதன்
அயோத்தியில் சோகம்.
*
Sita in the forest in search of Rama
Successive shots
In Ayodhya tragedy.

*

நீரோடை..!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
ஊருக்கு அழகு சேர்க்கிறது
ஊற்று நீர் பாய்ந்து
மலை சரிவின் கீழ் நீரோடை.
*
Adding to the beauty of the city,
Spring water flowing
Stream under the mountain slope.

*

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

பறத்தல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
மரங்களின் புன்சிரிப்பு
கீழே விழுந்த மலர்கள்
வண்ணத்துப்பூச்சிகள் பறத்தல்.
*
Tree's smile
Fall flowers
Butterflies fly.

*

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

கண்ணாடிப் பெட்டி...!! ( ஹைக்கூ )

 Haiku – Tamil / English.
*
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீர்க் காற்றில்
அசைவற்ற பூச்செடிகள்.
*
Mirror box
Water in the air
Flowers immobile.

*

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

இருள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
உடம்பைக் காணவில்லை
உணர்வு தெரியவில்லை
கரைத்து கொள்கிறது இருள்
*
Missing bodies
Sense of wonder
Darkness is dissolved

*

புதன், 17 ஆகஸ்ட், 2016

சலவை...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English;
*
அழுக்காகி விடுகிறது
புதுப்பிக்கின்றார்கள்
மூளை சலவை.
*
Is spoiled
Revives
Brain wash.
*