ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
லேபிள்கள்
- அஞசலி... (5)
- அறிமுகம் (1)
- இரு வரி கவிதை (1)
- இருவரி கவிதை (1)
- இருவரி கவிதைகள் (2)
- கட்டுரை (5)
- கருத்து (4)
- கவிதை (38)
- கவிதை. (1)
- கவிதைகள் (5)
- குக்கூ (1)
- குறுங்கவிதை. (1)
- குறுங்கவிதைகள் (1)
- சென்ரியு (122)
- சென்ரியு. (40)
- துணுக்கு (3)
- நல்ல நாள் (1)
- நூல் அறிமுகம். (15)
- நூல் விமர்சனம் (1)
- படம் (14)
- பரேகு ஹைக்கூ (4)
- புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)
- புதுக் கவிதை (1)
- புதுக் கவிதைகள் (1)
- பொங்கல் நல்வாழ்த்துக்கள் (1)
- மினி கவிதை (5)
- மினி கவிதைகள் (5)
- லிமரைக்கூ (16)
- வாழ்த்து. (1)
- வாழ்த்துக்கள் (17)
- ஜென் (2)
- ஜென் கதை (1)
- ஜென்கதை (4)
- ஹைக்கூ (394)
- ஹைக்கூ கவிதை (16)
- ஹைக்கூ கவிதைகள் (18)
- ஹைக்கூ கவிதைகள். (2)
- ஹைக்கூ. (76)
- ஹைபுன் (42)
- ஹைபுன் கவிதைகள் (1)
- HaiKu (5)
- Haiku. (1)
- Quotes (2)
வியாழன், 27 ஜூன், 2019
அம்மையப்பர்
அம்மையப்பர்.
1.
இலைகள் மெல்ல அசைந்தன
இருட்டில் எதுவும் தெரியவில்லை
பறவைகள் கலவி சத்தம்.
2.
நாலாபக்கமும் நறுமணம்
ஊதுபத்தி புகை சுருளாய்
அலர்ஜியில் தும்பினார் விநாயகர்.
3.
பௌர்ணமி கதிர்வீச்சு
ஓசையற்ற அமைதி
எறும்பின் பாதயாத்திரை.
4
விலை மதிப்பற்றது உலகில்
குழந்தைகள் கட்டிய மணல் வீடு
கரைத்து விட்டது பெருமழை.
5.
விழாமல் காக்க
மஞ்சள் கயிறு சுற்றினார்கள்
நூறாண்டு வயது
வேம்பு அரசு இணைந்த மரம்.
6.
நேற்று தான் விழுந்தான்
ஆழம் அறியாமல் அவள்
கன்னக்குழியில்...
7.
லிங்கம் வணங்கி எழுந்தாள் சக்தி
சிவன் உணர்ந்து விழித்தான்
நாரதர் குரல் வெளியில்.
8.
மழை வேண்டி யாகங்கள்
பெரும் கரும்புகைச் சூழ்ந்து
மூச்சு திணறினார் அம்மையப்பர்.
9.
வானில் மின்னல்
குடும்பத்தில் இன்னல்
கடப்பவன் அறிவாளி.
10.
வெட்கமில்லாமல்
உலகமெங்கும் எந்நேரமும்
நிர்வாணமாய் சுற்றுகிறது காற்று.
11.
கோடை மழையில்
நனைந்து தவிக்கிறது
குழந்தை தவறவிட்ட பொம்மை.
12.
நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள்
ஏமாற்றுக்காரர்களிடம்
ஏமாற்றுபவர்கள் எப்பொழுதும்.
13.
அந்த பறவை
எந்த மரத்தைத் தேடுகிறது
மனமில்லாத இடத்தில் பறந்து.
14.
மலைப் பாறையில் குருவி
அடிவாரத்திற்கு வர யோசனை
எது சுருக்கு வழியென பார்வை.
15.
மரணித்தவர் மனம் குளிர்வித்து
கல்லறையைக் குளிப்பாட்டியது
பலத்த மழை.
16.
இடம் கிடைக்கவில்லை அமர்வதற்கு
புறப்பட இன்னும் சில நிமிடங்கள்
குழந்தைகள் பொம்மை ரயில்.
17.
உன்னை நான் நினைக்கவில்லையே
எப்படி சாப்பிடும்போது புரையேறுகிறது?
உச்சி வரை.
18.
துறவி இல்லாத மடம்
தங்கி காலம் கழிக்கிறார்கள்
ஊர் சுற்றும் நாடோடிகள்.
19.
நான் பேசுகிறேன்
நீ மௌனம் சாதிக்கிறாய்
என் மௌனம்
உன்னை பேச வைக்கும்.
20.
களைத்துப் போய் இருக்கிறாய்
சற்றே ஓய்வெடு
உன் அருகிலிருக்கும்
பூனையின் தூக்கம் கெடுக்காதே.
21.
உச்சநிலை பேச்சு
கவனியாமல் காத்திருக்கு
டீப்பாய் மேல் சூடான டீ.
22.
ஆத்திரம் அவசரப்பட்டான்
எல்லா வேலைகளையும் வீணானது
குழப்பத்தில் மனம்.
23.
ஒன்று குண்டு
இன்னொன்று ஒல்லி
மல்லி, முல்லை
பூக்கள் ஒரே இனம்.
24.
வாழ்த்துவதற்கு போனவன்
விசை வாங்கித் திரும்பினான்
பிரச்சினையில் சிக்கி.
25.
வெளியில் கொட்டும் மழை
தொலைக்காட்சியில்
காரசாரமான தண்ணீர் விவாதம்.
26.
இருட்டியது வானம்
வழிதேடி அலைந்து
மழையில் நனைகிறது தும்பி.
27.
விசும்பின்
விந்து
மழை.
28.
எந்த மொழியிலும் இன்னும்
மொழிபெயர்க்கப்படவில்லை
அந்த பறவையின் பாடல்.
ந க துறைவன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக