ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
லேபிள்கள்
- அஞசலி... (5)
- அறிமுகம் (1)
- இரு வரி கவிதை (1)
- இருவரி கவிதை (1)
- இருவரி கவிதைகள் (2)
- கட்டுரை (5)
- கருத்து (4)
- கவிதை (38)
- கவிதை. (1)
- கவிதைகள் (5)
- குக்கூ (1)
- குறுங்கவிதை. (1)
- குறுங்கவிதைகள் (1)
- சென்ரியு (122)
- சென்ரியு. (40)
- துணுக்கு (3)
- நல்ல நாள் (1)
- நூல் அறிமுகம். (15)
- நூல் விமர்சனம் (1)
- படம் (14)
- பரேகு ஹைக்கூ (4)
- புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)
- புதுக் கவிதை (1)
- புதுக் கவிதைகள் (1)
- பொங்கல் நல்வாழ்த்துக்கள் (1)
- மினி கவிதை (5)
- மினி கவிதைகள் (5)
- லிமரைக்கூ (16)
- வாழ்த்து. (1)
- வாழ்த்துக்கள் (17)
- ஜென் (2)
- ஜென் கதை (1)
- ஜென்கதை (4)
- ஹைக்கூ (394)
- ஹைக்கூ கவிதை (16)
- ஹைக்கூ கவிதைகள் (18)
- ஹைக்கூ கவிதைகள். (2)
- ஹைக்கூ. (76)
- ஹைபுன் (42)
- ஹைபுன் கவிதைகள் (1)
- HaiKu (5)
- Haiku. (1)
- Quotes (2)
திங்கள், 15 ஜூலை, 2019
பல்லாங்குழி
பல்லாங்குழி
1.
மதர்த்த பெருமுலை கவர்ச்சி
பார்வை கவரும் சக்தி
கல்தூண் சிலையழகு.
2.
பாறை மீது தியானம்
காற்றின் திசையில்
அலைகிறது துறவியின் தாடி.
3.
அந்த பசுமை புல்வெளி
எனக்கு சொந்தம் அல்ல
இயற்கையின் சொத்து.
4.
மழைக்கு ஒதுங்கியது
இலையின் பின்புறம்
நனையாமல் சிறுபுழுக்கள்.
5.
பூங்காவில் நுழைவதற்கு
பறவைகளுக்கு
அனுமதி இலவசம்.
6.
இலையின் பின்புறம்
வெண்புள்ளியாய் இருப்பது
எந்த புழுவின் சினைமுட்டை?
7.
இரை உண்டு பசியாறின
முட்டைகள் இடுவதற்கேற்ற
நீர்நிலைத் தேடின வாத்துகள்.
8.
இனிப்பாய் சுவைத்து ரசிப்பு
அந்த குளிர்ப்பானக் கடையில்
ஒலிக்கிறது கானா பாடல்.
9.
கோயிலில் குடியிருப்பது
அசலா? போலியா?
மக்கள் வணங்கும் மூலவர்கள்.
10.
தோல்விக்கு வருத்தப்பட்டாள்
நாணித் தலை கவிழ்ந்து
பல்லாங்குழி விளையாட்டு.
11.
தறியில் அறுந்த நூல்
இணைத்து வேலை தொடர்ந்தான்
குடும்பத்தில் சிக்கல்.
12..
சாமி படத்திலிருந்து விழுந்தது பூ
நல்ல சகுணமென வணங்கினாள்
சுவரோரமாய் நகர்ந்தது பல்லி.
13.
பசியில் அலைந்த நாய்களுக்கு
தெருமூலையில் கிடைத்தது திருப்தியாய்
எச்சில் வாழையிலை சோறு.
14.
பாலாற்றைக் கடந்து போகிறது ரயில்
சென்னை நோக்கி பயணம்
ஜோலார்ப்பேட்டை தண்ணீர்.
15.
வலிகள் சொல்லாமல் மௌனம்
மலர்கள் தாங்கி சுமக்கும்
மழைத்துளியின் அதிர்வுகள்.
16.
எருக்கம் செடி நிறைய பூக்கள்
யாரும் பறிக்காமல் உதிர்ந்தன
அருகில் பிள்ளையார் கோயில்.
17.
தனியாருக்கு தாரை வார்ப்பு
எதிர்த்து வயல்வெளியில்
மரவட்டை ( ரயில் பூச்சி ) கள் மறியல்.
18.
யாரும் நிர்பந்திக்க இயலாது
இதுதான் உண்ண வேண்டுமென
பூச்சிகளே பல்லிகள் உணவு.
ந க துறைவன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக