திங்கள், 25 மே, 2015

நடனம்...!! [ SENRYU / சென்ரியு ]

*
மின்மினிகளின் நடனம்
இரசிக்கும்
நட்சத்திரக் கூட்டம.
*

ஞாயிறு, 24 மே, 2015

எறும்பு...!! [ HAIKU / சென்ரியு ]

*
சிந்தனையில் ஆழ்ந்தவன்
பதறியடித்து எழுந்தான்
எதற்கு கடித்தது எறும்பு.
*

வெள்ளி, 22 மே, 2015

.இரவு...!! [ சென்ரியு ]

*
கனவுகளிலேயே விடிவதற்குள்
கழிந்து விடுகின்றது
இனிமையான இரவு.
*

ஆமைத் தலை...!! [ SENRYU / சென்ரியு ]


*
கடுமையான கோடை வெயில்
எல்மெட்டிற்குள் வியர்வை
நனைகின்ற ஆமைத் தலை.

ந.க.துறைவன்.

புதன், 20 மே, 2015

அனுபவம்....!! [ HAIKU / ஹைக்கூ ]


*.
மனிதனுக்கு உணர்த்துகிறது
வாழ்க்கை அனுபவத்தை
துயரமில்லாதத் தும்பைப் பூக்கள்.
*
விண்ணில் மண்ணில் தேடினும் 
எளிதில் கிடைக்குமா?
வாழ்த்கை இரகசியம். .
*
சலிப்பில்லாத உறவு
வெறுப்பில்லாத அன்பு
தேடுகின்றது மனம்.

*

செவ்வாய், 19 மே, 2015

பூவிதழில்....!! [ SENRYU / சென்ரியு ]

*
எழுத்தில்லாதச் சுவடு
பூவிதழில் காதல் வாசகம்
படிக்கும் பட்டாம்பூச்சிகள்

*

வாசம்...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
காற்றில் அலைகிறது தூசு
உள் புழுக்கி அழுகிறது குப்பை
எப்பவும் தூய்மையானது மனம்.
*
காற்றில்லை வெளிச்சமில்லை
தவளைச் சத்தமில்லை
மழை இரவு.
*
விடியல் பனிக் காலை
சுமந்து வருகின்றன காற்று
மகிழம் பூக்கள் வாசம்.
*.