புதன், 9 மார்ச், 2016

செயல்பாடுகள்...!! ( ஹைபுன் )


*
செயல்பாடுகள் என்பது ஒவ்வொரு மனிதரிடத்திலும் வேறுபடும். தன்மை வாய்ந்தனவாகும். ஒருவர் செய்வதை இன்னொருவர் செய்ய முடியாது. சுயமாக அவரவர்களுக்கென எப்படிச் செய்ய வேண்டுமென்ற முனைப்பு உண்டு. அப்படியே செய்து அசத்துவார்கள். அது மற்றவர்களைக் கவரும். ஒரு சிலர் அவர்கள் செய்கிறார்களே நாமும் செய்வோம் என்று செய்வார்கள். அச்செயல் பிரதி எடுப்பதாகும். இச்செயல் பலநேரங்களில் நகைப்பிற்குரியதாகவும் அமைந்து விடுவதுண்டு. செய்கின்ற செயல் நன்கு சிந்தித்து செய்தாலே, அச்செயல் செம்மையாக அமைந்துவிடும்.    
*
எந்த வேலையும் செய்வதில்லை?
சும்மாயிருக்கிறது எப்பொழுதும்
செயலற்று செயல்புரியும் மரங்கள்.
*

தும்பிகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
புரிந்தால் தலை கவிழும்
புன்னகை புரியும்  உதடுகள்
உரசி பறக்கின்றன தும்பிகள்.
*        
Tilting the head to understand
Who is smiling lips
Scraping dragon fly fly.

*

திங்கள், 7 மார்ச், 2016

சிவநடனம்...!! ( ஹைக்கூ )


சிவனுடன் ருத்ரமாய்
சுடலையில் நடனமாடின
இறந்த ஆன்மாக்கள்.

*

சனி, 5 மார்ச், 2016

புத்தம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tami / English.
*
புத்தாவின் புத்தம்
என்னுள் ஒளிர்கிறது         
விழிப்புணர்வு புத்தம்.
*
Buddha's brand
Shining me
Brand awareness.
N.G.Thuraivan.

*

வெள்ளி, 4 மார்ச், 2016

ஹைக்கூ என்றால் என்ன?

ஹைக்கூ என்றால் என்ன?
*
பிளித், ஹைக்கூ பற்றிக் கூறியிருப்பது, நம் கவனத்திற்குரியது. “ ஹைக்கூ செய்யுள் அல்ல. இலக்கியமல்ல. அது நம்மைத் தட்டி அழைக்கும் கை. பாதி திறந்திருக்கும் கதவு. சுத்தமாகத் துடைக்கப்ட்ட கண்ணாடி. இயற்கையின்பால் நம் கவனத்தை ஈர்க்கும் இலக்கிய வடிவம். குளிர்கால மழையையும் மாலைப் பறவையையும் உஷ்மான பகலையும் நீண்ட இரவையும் நம் முன் உயிர் பெறச் செய்யும் உத்தி. பேசாமல் பேசி, நம் மனிதாபிமானத்தில் பங்கு கொள்ளும் இலக்கியச் சாதனம்.
இலக்கிய வடிவங்களில் ஹைக்கூ எளிய, ஆனால் நுண்ணிய உணர்வுகள் கொண்டது. கபடமற்ற எளிய தன்மை அதன் சிறப்பம்சம். கலைப் படைப்பா அவ்லது இயற்கையின் படைப்பா என்று மயங்க வைக்கும் தன்மையுடையது.
ஆதாரம் ” ஜென் கதைகள் – கவிதைகள் – நூல் பக்கம் 46.
தகவல். ” ந.க.துறைவன்.
*  

வியாழன், 3 மார்ச், 2016

சிரிப்பு...!! ( ஹைக்கூ )

*
Haiku – Tamil / English.
*
கோபுர சிலைகளின்
அழகை கண்டு       
புறாக்களுக்கு சிரிப்பு.
*
The statues tower
View Charm
Laughter pigeons.

*

துப்பட்டா... ( ஹைக்கூ )

Haiku  - Tamil / English.
*                                       
மனிதர் எவரும் காணவில்லை
பாறையின் மேல் இருக்கிறது.
கம்பளித் துப்பட்டா.
*
No one person is missing
It is the top of the rock.
Woolen stole.
*