புதன், 9 மார்ச், 2016

செயல்பாடுகள்...!! ( ஹைபுன் )


*
செயல்பாடுகள் என்பது ஒவ்வொரு மனிதரிடத்திலும் வேறுபடும். தன்மை வாய்ந்தனவாகும். ஒருவர் செய்வதை இன்னொருவர் செய்ய முடியாது. சுயமாக அவரவர்களுக்கென எப்படிச் செய்ய வேண்டுமென்ற முனைப்பு உண்டு. அப்படியே செய்து அசத்துவார்கள். அது மற்றவர்களைக் கவரும். ஒரு சிலர் அவர்கள் செய்கிறார்களே நாமும் செய்வோம் என்று செய்வார்கள். அச்செயல் பிரதி எடுப்பதாகும். இச்செயல் பலநேரங்களில் நகைப்பிற்குரியதாகவும் அமைந்து விடுவதுண்டு. செய்கின்ற செயல் நன்கு சிந்தித்து செய்தாலே, அச்செயல் செம்மையாக அமைந்துவிடும்.    
*
எந்த வேலையும் செய்வதில்லை?
சும்மாயிருக்கிறது எப்பொழுதும்
செயலற்று செயல்புரியும் மரங்கள்.
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக