செவ்வாய், 17 மே, 2016

பால்வெளி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வெளியில் பறந்து  திரியும்
பறவைக்கு தெரியுமா?
பால்வெளி  ரகசியம்.
*
Who flew in space
Bird know?
The secret of the Milky Way.

*

காத்திருப்பு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
மழையை எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறது
காட்டில் வளரும் மரங்கள்.
*
Expectant rain
Waiting Growing
Trees in the forest.

*

திங்கள், 16 மே, 2016

குடை...!! ( ஹைபுன் )



இந்தப் பூமி அதிகம் வெப்பமடையாமல் பாதுகாப்பதற்காக மரம்செடி கொடிகள் எல்லாம்  குடை பிடித்து நிழல் கொடுக்கின்றன. உயிரினங்கள் கடுமையான வெப்பத்திலிருந்து, தற்காத்துக் கொள்கவதற்காக நிழல் தேடி ஒதுங்கி நின்று ஆசுவாசம் பெறுகின்றன. வயதானவர்கள் கையில் குடை வைத்துக் கொண்டே நடைபழகுகிறார்கள்.  வெயிலுக்கு நீ குடைப் பிடித்துப் போவதை நான் பார்க்கவில்லை மழைக்கு நீ குடைப் பிடித்துப் போவதை நான் பார்க்கவில்லை எப்பொழுதும் எடுத்து விரித்துப் போகாமல் எதற்காக வைத்திருக்கிறாய் கைப்பையின் உள்ளே வண்ணக்குடை? அது உன் பாதுகாப்பிற்காகத்தானே?

எடுத்துக் குடையை விரி
இருவரையும் இணைக்கும்
மழைக்கு நன்றி சொல்வோம்.

ந.க.துறைவன்

சனி, 14 மே, 2016

வரம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வாழ்க்கை ஒரு வரம்
மனிதருக்கு
வாழக் கிடைப்பது ஒரே தரம்.
*
Life is a gift
Humans
Only quality live availability.

*

திங்கள், 9 மே, 2016

தாமரைப்பூ...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
தன்  நிழலை  நீரில்
தானே  பார்க்கிகிறது
தாமரைப் பூ.
*
His shadow in the water
Sees Himself
Lotus flower.

*

புதன், 4 மே, 2016

நத்தைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
ஆற்றில் வாழும்
நத்தைகளுக்கு தெரியும்?
மணலை பற்றிய அறிவு.
*
Live in river
Slugs knows?
Knowledge of sand.

*

திங்கள், 2 மே, 2016

நுங்கு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வெயிலில் மூதாட்டி
இலை போர்த்திய கூடை
உள்ளே குளிர் நுங்குகள்.
 *
Godmother in the sun
Leaf-covered basket
In cold jelly vettin.