திங்கள், 17 ஆகஸ்ட், 2020

ஓவியம் ( ஹைக்கூ )

அப்பா மரணம்
இரவு நிலவொளி
அந்த ஓவியம் என்னருகில்.

Dad died
Night moonlight
That painting is near me.

Thuraivan NG

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

வனம் ( ஹைக்கூ)

மூங்கில் வனம்
காற்று நிரம்பிய வெளி
எங்கும் இசை பிரவாகம்.

ந க துறைவன்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

மரம் ( கவிதை )

எப்பொழுதும் என் வீட்டுப் பின்னழகு
வாழைமரம் குலைத்தள்ளி பாரம்
கீழே இரு குருத்துவப் பிள்ளைகள் நோன்சானாய்
பெருங்காற்று மழையில் கோடாய் கிழிந்து
வேரோடு தலைசாய்ந்து சேதாரம்.

ந க துறைவன்.

சனி, 8 ஆகஸ்ட், 2020

விழுதுகள் ( ஹைக்கூ )

அது என் தொப்புள் கொடி
ஆதிகாலத் தொடர்ச்சி
ஆலமரம் விழுதுகள்.

It's my naval flag
Primitive continuum
Tree tentacles.

Thuraivan NG

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

குடில் ( கவிதை )

தொலைதூரத்தில் தெரிந்தது மலை
பார்க்கும்போது என் மிக அருகில்
நடக்க நடக்க வெகுதூரம் யாருமற்ற வெளி
விளைச்சலற்ற காட்டுச் செடிகள் புதர்
ஒற்றையடி பாதையில் துறவியின் குடில்.

ந க துறைவன்.

புதன், 5 ஆகஸ்ட், 2020

தவளைகள் ( ஹைக்கூ )

நீரில்லாத குட்டை
தவளைகள் உரையாடல்
மழை குறித்து விமர்சனம்.

Waterless puddle
Frogs conversation
Review of the rain.

Thuraivan NG