புதன், 30 மார்ச், 2016

அச்சம் ...!! ( சென்ரியு )

Senryu  – Tamil / English.
*
உச்சம் நிகழ்ந்தது
அச்சம் அகன்றது
வெட்கம் கவிழ்ந்தது.
*
Pinnacle occurred
Fear cleared
Shame collapsed.
*


சம்பவம்...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English.
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்த சம்பவம்.                                                         
*
Which arises from the
Remember to periodically
Wanted to forget the incident.

*

திங்கள், 28 மார்ச், 2016

ஆக்கிரமிப்பு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;.
*
எல்லா  சாஸ்திரங்கள்  படித்தவர்
மனமெல்லாம்  ஆக்கிரமித்துள்ளது
காம  சூத்திரம்,
*
Studied all the scriptures
Occupies energizing
Kama Sutra,

*

ஞாயிறு, 27 மார்ச், 2016

சிவம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
சத்தியம்,சிவம், சுந்தரம்
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
Truth, Shivam, Sundaram
Three on the forehead
Haiku lines.

*

சனி, 26 மார்ச், 2016

முயல்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
பாதையில் போகிறது நரி
புதரில் இருந்து பார்க்கிறது
அறிவாளி  முயல்.
*
Fox is going to be on track
Checking out from Shrub
Awesome rabbit.

*

வியாழன், 24 மார்ச், 2016

புனிதவெள்ளி...!!

இனிய காலை வணக்கம் நண்பர்களே
அனைவருக்கும் புனிதவெள்ளி நல்வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு பகலும் வார்த்தைகளைப் பொழிகிறது. ஒவ்வொரு இரவும் அறிவைத் தெரிவிக்கிறது.
அவைகளுக்குப் பேச்சுமில்லை. வார்த்தைகளுமில்லை. அவைகளின் குரல் கேட்பதுமில்லை.
நானோ குற்றமற்ற வாழ்க்கை வாழ்கிறேன். என்னைமீட்டுக் கொண்டு என் மேல் இரக்கமாயிரும்.
எனக்கு இணையான மனிதனும் என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.
நன்றி  : பைபிள் வாசகங்கள்.

*

செவ்வாய், 22 மார்ச், 2016

பொறாமை... !! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
மனசில் பொறாமை
பூமிக்குள் மறைந்த வேர்களாய்
வெளியில் சிரிக்கும் இலைகள்.                                        
*
Feel Envy
Late in the earth root
Smiling on the outside leaves.
*