*
NA. GA. THURAIVAN'S HAIKU.
*
பகையுணர்ச்சி
நெஞ்சில்
எப்படி புகுந்தது?
மாம்பழத்தின்
உள்ளே வண்டு.
*
கிராமத்துப்
பெண்களின்
சிறுத்த
இடையில்
நீரில்லாத
காலிக் குடம்.
*
காட்டில்
வாழப் பிடிக்காமல்
வெளியேறி
ஊருக்குள்
புகுந்து
விட்டன சிறுத்தைகள்
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக