*
அனுபவித்து பார்த்தவர்களில்லை
அனுபவித்து சலித்தவர்கள்
உண்டு
அலுக்காத அனுபவமே
வாழ்க்கை.
*
என்ன வாழ்க்கை
யென்று?
என்றும் வெறுத்து
ஒதுக்குவதில்லை
பாரினிலில் வாழும்
பறவைகள்.
*
ஒவ்வொரு நொடியில்
வாழ்கின்றது
யாரும் கவனிப்பாரற்ற
வெளியில்
மலைமுகட்டில் செழிப்பாய்
மரம்
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக