செவ்வாய், 13 செப்டம்பர், 2016

அன்பை உணர்...!! ( ஹைக்கூ )



1.
பூக்கள் மலர்ந்தன
ஆம்! ஓசை இல்லை
மனத்துக்குள் மலர்ந்த காதல்.
2.
அழகில் மூழ்கு
அன்பை உண்
உன்னை உணர்வாய் நீ.
3.
உறவுக்குப் பெயர் வைத்தோம்
உணவுக்குப் பெயர் வைத்தோம்
உண்மைக்கு.
4.
நீரின்றித்
தாமரை மலருமா?
அட! மலைமேல் கற்றாழை.
5.
ஒற்றைத் தலையில்
எத்தனை உச்சி வகிடுகள்!
அழகே! தென்னங்கீற்றுகள்.
6.
சுவையான உணவின்றிச்
செத்துவிட்டது நாக்கு
இன்னும் முடியவில்லை சீரியல்.
7.
குளிரில் குளிப்பதற்காக
ஆடையை அவிழ்க்கும் அழகிகள்
இலையுதிர் கால மரங்கள்.
*
நன்றி : அ.விஜயன் – ” எல்லாமே பூக்கள் தான் ” – என்ற ஹைக்கூ தொகுப்பிலிருந்து.
தகவல் ; ந.க.துறைவன்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக