மற்றவர்கள்
வாழ்கின்ற வாழ்க்கை என்னுடையதல்ல. நான் வாழ்கின்ற வாழ்க்கையே எனக்கு சொந்தம். - என்று
எல்லோருமே நினைக்கின்றார்கள். அதிலென்ன தவறு இருக்கிறது? ஒவ்வொருவருக்குமான ஒரு வாழ்க்கை
இருக்கிறது. அதைத் தான் அவர்கள் வாழ வேண்டியிருக்கிறது. இந்தியக் கலாச்சாரம், பண்பாடு,
மக்களை எப்படி வாழ வேண்டுமென்று ஏராளமான ஆன்மீக நியதிகளை வகுத்தளித்துள்ளது. அதில்
சரியான வழிக்காட்டுதலும் உண்டு. மரபு மீறிய தவறாக நெறிமுறைகளும் உண்டு மேலைக் கலாச்சாரம்
சார்ந்துள்ள வாழ்க்கை முறைகளும் உண்டு. இந்தியக் கலாச்சார வாழ்க்கை என்பது கூட்டுக்
கலவையான வாழ்க்கை முறையாகவே திகழ்கின்றது.
அடைக்கப்பட்ட
இனிப்பான
மருந்து
கலவையாய் இருக்கிறது
மனித
சமூக வாழ் நெறிகள்.
* *
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக