வியாழன், 24 மார்ச், 2016

புனிதவெள்ளி...!!

இனிய காலை வணக்கம் நண்பர்களே
அனைவருக்கும் புனிதவெள்ளி நல்வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு பகலும் வார்த்தைகளைப் பொழிகிறது. ஒவ்வொரு இரவும் அறிவைத் தெரிவிக்கிறது.
அவைகளுக்குப் பேச்சுமில்லை. வார்த்தைகளுமில்லை. அவைகளின் குரல் கேட்பதுமில்லை.
நானோ குற்றமற்ற வாழ்க்கை வாழ்கிறேன். என்னைமீட்டுக் கொண்டு என் மேல் இரக்கமாயிரும்.
எனக்கு இணையான மனிதனும் என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.
நன்றி  : பைபிள் வாசகங்கள்.

*

செவ்வாய், 22 மார்ச், 2016

பொறாமை... !! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
மனசில் பொறாமை
பூமிக்குள் மறைந்த வேர்களாய்
வெளியில் சிரிக்கும் இலைகள்.                                        
*
Feel Envy
Late in the earth root
Smiling on the outside leaves.
*

திங்கள், 21 மார்ச், 2016

கழுதை ..!! ( பழமொன்ரியு )


*
வைக்கோல் படப்பையை
நாய் காவல் காக்கும் மாதிரி,  அழுக்கு
மூட்டையைக் காக்கிறது கழுதை.

*

ஞாயிறு, 20 மார்ச், 2016

வெளியேற்றம்...! ( சென்ரியு )

Senry – Tamil / English.
*
காட்டில் வாழப் பிடிக்காமல்
வெளியேறி ஊருக்குள்
புகுந்து விட்டன சிறுத்தைகள்
*
Did not want to live in the jungle
Evacuating the city
Panthers inroads

*

சனி, 19 மார்ச், 2016

எச்சம்...!! ( லிமரைக்கூ )

Limaraiku – Tamil / English.
*
அவமானத்தில் பெரும் கூச்சம்
நினைவலைகள் எங்கோ அலைகிறது?
தலையில் விழுந்தது காக்கையின் எச்சம்.
*
The great shame and shyness
Memories oscillates somewhere?
Crows fell on the head of the residue.

*.

வியாழன், 17 மார்ச், 2016

துணிவு...!! ( ஹைபுன் )


*
மனிதர்களின் அச்சமும் துணிவும் தற்காலிகமானது. எப்பொழுதும் மனம் ஒரு நெருடலான சஞ்சல நிலையிலேயே நகர்ந்துக் கொண்டே இருக்கிறது. எந்தவொரு நிகழ்வுின் போதும் என்ன நடக்குமென்று தெரியாமல் சிலநேரங்களில் பீதியில் தடுமாறி செயல்படுகிறது. அதை புத்திசாலித்தனமாக சமாளிக்க எத்தனையோ வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். ஆனால்,அம்முயற்சி முழுமைப்பெறுவதில்லை. மனம் எப்பொழுதும் இரட்டை நிலையில் தான் செயல்படுவதாகவே அமைந்திருக்கிறது.
*
.எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும்
எதிர்நோக்கி கண்துஞ்சாமல்
துணிவோடு வாழ்கின்றன இயற்கை.

*

புதன், 16 மார்ச், 2016

நிறம்...!! ( ஹைக்கூ )

Haiku  - Tamil / English.
*
காண்பதெல்லாம்  நிறமா?
நிறம் எதுவாயினும்
எல்லாமே ஒரே நிறம்.
*
See color?
Any color
All the same color.
*