செவ்வாய், 22 செப்டம்பர், 2015

விறகு...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil – English.
*
சடங்கு முடிந்த பிறகு
எல்லோரும் கலைந்தனர் குளிக்க
பிணத்தைப் பொசுக்கியது விறகு.
*
After the ceremony was over,
Everyone dispersed bath
Firewood scorched corpse.
*.

கேள்வி...!! [ ஹைக்கூ }

Haiku – Tamil / English.
*
அருகில் நின்று பார்த்தேன்
யார் நீ என்று கேட்டது?
பெயர் தெரியாத பூ.
*
Standing nearby saw
Who asked you?
Flower anonymity.
*

திங்கள், 21 செப்டம்பர், 2015

இயற்கையின் ரகசியம்...!! [ ஹைபுன் ]


*
இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கையே இயல்பான வாழ்க்கை. இயற்கை தரும் கொடை அனைத்தும் பரிபூரணமானது. தூய்மையானது. வளமை மிக்கது. இயற்கையின் எல்லா சுற்றுச் சூழல்களையும் மனிதன் அனுபவிக்கப் பெற்றவன். அவனுக்காக இயற்கைப் படைத்தப் பொக்கிஷங்கள். ஏராளம். இயற்கையின் எந்தவொரு அம்சமும் பழுதடையாதது. அப்படியே பழுதடைந்தாலும் அதுவாகவே சீர்செய்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது இயற்கையின் தீயவிளைவுகள் மனிதனைப் பாதித்தாலும் அவைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் இயற்கை வழியே பெறமுடிகின்றது.
*
அழியாதது செழிப்பானது
உலகையே வளமாக்குவது
இயற்கையின் ரகசியம்.
*
 விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள்
அஞ்ஞானிகள் மெய்யறிகிறார்கள்.
இயற்கையின் ரகசியம்.

 *

சனி, 19 செப்டம்பர், 2015

பார்வை...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
யாரும் பார்த்துக் கொண்டதில்லை
ஒருவர் முகத்தை ஒருவர்
இருவருக்குமே பார்வையில்லை..
*
No one has seen
Face one another
Perspective for both ..

*

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

மனநிலை...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
நன்றாகத் தானே பேசுகிறாள்
எல்லாம் தானே செய்கிறாள்
எப்படி பாதித்த மனநிலை?
*
Speaks alright
Doing everything right
And how that affected the mood?
*

மின்மினி...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
கையில் பிடித்தால்
சுட்டு விடுமா? ஒளிரும்
மின்மினிப் பூச்சிகள்.
*
If caught in the hand
Will shot? Flashing
Fireflies.
*

புதன், 16 செப்டம்பர், 2015

ஹைக்கூ சித்திரம்...!! [ ஹைக்கூ ]


*
புஸன் எழுதினார் :
*
இந்தச் சின்னஞ்சிறு ஹைகூக்கள் சாதாரணக் கவிதைகள் அல்ல.  மிக எளிமையாய் ஒரு வார்த்தை சித்திரம் வரைகின்றன. அழகைப் பற்றிய அனுபவமோ, சத்தியமோ, அன்போ, கவிஞனின் இதயத்தைத் தொட்டுத் தூக்கிய எதையுமே சொல்லோவியமாகச் சித்திரிக்கின்றன.

பேரிமரத்தில் பூத்திருக்கிறது
நிலவொளியில் ஒரு பெண்
வாசிக்கிறாள் ஒரு கடிதம் அங்கே
அங்கே மௌனம் பொங்குகிறது.
*
ஆதாரம் : ஒஷோவின் பிரபஞ்ச ரகசியம் – ஸென் ஹைக்கூ – நூல் – பக்கம் – 119.
தகவல் : ந.க.துறைவன்.

*