புதன், 31 டிசம்பர், 2014

ஏகாந்த வெளி...!! [ ஹைக்கூ ]

N.G. THURAIVAN'S HAIKU. 
*
யாருமற்ற சூன்ய வெளி
அமைதி நிரம்பிய
துணிச்சலானப் பறவைகள்
*
ஏகாந்த வெளியில்
கவனிப்பாரற்ற
ஏராளமான புல்பூண்டுகள்
*
குக்கூ, பொய்க்கூ, போலிக்கூ
எல்லாமே இன்று
மெய்க்கூ ஹைக்கூ கவிதைகள்.
*

நல்வாழ்த்துக்கள்...!!

*
WISH YOU A HAPPY NEW YEAR.
அன்பு நண்பர்கள்
அனைவருக்கும்
ஆங்கிலப் புத்தாண்டு
இனிய நல்வாழ்த்துக்கள்
காலை வணக்கம்
வாழ்க வளமுடன்.

*

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

அழிப்புகள்...[ சென்ரியு ]

*
N.G.THURAIVN'S SENRYU>
*
ஆதித் தமிழ்நாட்டு வளம்
அழித்தவர்கள் செழித்தார்கள்
கிராமங்கள் மலைகள் அழிப்பு.
*
ஆறுகள் நதிகள் அழித்தான்
விவசாயம் அழிந்தான்
இயற்கையின் எதிரி மனிதன்

*

அழிப்புகள்...!! [ சென்ரியு ]

*
N.G.THURAIVAN'S SENRYU.
*
ஆதித் தமிழ்நாட்டு வளம்
அழித்தவர்கள் செழித்தார்கள்
கிராமங்கள் மலைகள் அழிப்பு.
*
ஆறுகள் நதிகள் அழித்தான்
விவசாயம் அழிந்தான்
இயற்கையின் எதிரி மனிதன்


சனி, 27 டிசம்பர், 2014

சாத்வீகம்...!! [ சென்ரியு ]

வீட்டிலே ஆத்திகன்
வெளியிலே நாத்திகன்
பேசுவதோ முற்போக்கு
சாத்வீகம்.
*
இருளின் அணைப்பில்
இரகசியப் பேச்சு
கேட்டு சிரிக்கிறது பல்லி.
*























திங்கள், 22 டிசம்பர், 2014

உருமாற்றம்...!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU.
*
உருமாற்றம் பெறுகின்றன
காய்கறிகள்
மாற்று மரபணுப் பயிர்கள்.

கீரை அலசிய தண்ணீரில்
துடித்து தவிக்கின்றன
சின்னச் சின்னப் புழுக்கள்.
*
இன்னும் பல் துலக்குகிறார்கள்
உமிக் கரியால் பகட்டில்லாமல்
கிராமத்து மனுசர்கள்

*

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

தும்பிகள்...!! ஹைக்கூ ]

*
N,G. THURAIVAN'S HAIKU.
தும்பைப் பூவின் மீது
அமைந்து எதையோ?
ஆராய்கிறது தும்பிகள்.
*
வரலாற்று சின்னமாய்
பாஷோவின்
தவளை குதித்த குளம்.
*
துவங்கிய இடத்திலேயே
முடிந்தது
ஓட்டப் பந்தயம்.
*

வெள்ளி, 5 டிசம்பர், 2014

அணுக்கதிர்கள்....!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU.
*
அணுக்கதிர் அழுக்கு நீரில்
நீந்தி விளையாடுகின்றன
கடல் மீன்கள்.
*
கடல் மீன்கள் வயிற்றில்
கலந்திருக்கின்றது
அணுக்கதிர் வீச்சுகள்.
*
அணுநீரை மீன்கள் குடிக்கின்றன
மீன்களை மனிதன் உண்கின்றான்
மனிதனை உண்கிறது மண்.
*
அன்னிய நாடுகள் அணுக்கழிவுகள்
அள்ளி வந்துக் கொட்டும்
குப்பைத் தொட்டி இந்தியா.
*
அன்னியநாடுகள் மூடுகின்றன
இந்தியா திறக்கின்றது
அணுஉலைக் கூடங்கள்.
*

உயிர்ஜோதி...!! [ ஹைக்கூ ]


*
அணுவுக்குள் அணுவாய்
எங்கே தொடங்கியது?
இன்றும் அணையாத ஜோதி்
*
இரத்தமாய் எண்ணெய்
திரி நரம்பில்
பிரகாசிக்கின்றது தீபம்.
*
உயர் மலையில் சுடர்கிறது
எல்லோரும் தரிசிக்கின்றனர்
எனக்குள் ஒரு ஜீவஜோதி.
*
ஜோதிக்குள் ஜோதியாய்
ஜோதியுள் ஐக்கியமாகிறது
மானுடத்தின் உயிர்ஜோதி.
*
உணர்த்துவது என்ன?
உயிர்த் தத்துவமாய்…
ஒளிர்கின்றது கார்த்திகை தீபம்.
*

செவ்வாய், 2 டிசம்பர், 2014

பாதுகாப்பு...!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU. 
வானில் பிரகாசிக்கின்றன
எங்கே என்று கண்டுபடிப்பது?
கார்த்திகை நட்சத்திரப் பெண்கள்
*
.மழை வெள்ளப் பெருக்கு
மண்ணே தெரியவில்லை
வெடித்து கிடந்த வயற்காடு.
*
சுதந்திரமாய் பாயும் தண்ணீர்
பாதுகாப்பு வளையத்திற்குள்
முல்லை பெரியார் அணை.
*

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

வாசிப்பு...!! [ iஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
ஆழ்ந்தப் புத்தக வாசிப்பு
வரிகளின் வசீகரிப்பு
இடையிடையே புன்சிரிப்பு.
*
பெண்ணின் கண்ணீராய்
சொட்டிக் கொண்டிருந்தது
தெருக் குழாய்.
*
கைக் கூடி வந்த பின்
எதையோ செய்யத் தூண்டுகிறது
ஏதோவொரு அதீத நினைப்பு.
- ந.க. துறைவன் ஹைக்கூக்கள்.

*

திங்கள், 22 செப்டம்பர், 2014

காற்று...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
தரையில் சும்மாயிருக்கும்
சருகு இலைகளை சலசலவென
சிரிக்க வைக்கின்றன காற்று.
*
குரங்குகளின் விளையாட்டை
வேடிக்கைப் பார்த்து
பங்கெடுக்கின்றன அணில்கள்.
- ந.க. துறைவன் ஹைக்கூக்கள்.
*

சனி, 20 செப்டம்பர், 2014

பறத்தல்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU. 
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்தச் சம்பவம்.
*
இடுப்பிலிருந்தக் குழந்தை
கீழே இறங்கியோடியது
பறந்து விட்டது சிட்டுக்குருவி.
*
பார்க்காமலிருக்க முடியாது?
பார்த்தாலும் யாருக்கும் தெரியாது?
விண்ணில் கிரகங்கள்.
*

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

வில்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
இலையும் தெரியவில்லை
கிளியும் தெரியவில்லை
பாய்ந்தது அர்ச்சுனன் வில்.
ந.க. துறைவன் ஹைக்கூ.

*

வியாழன், 18 செப்டம்பர், 2014

பதிவுகள்...!! [ சென்ரியு ]

*
NA.GA THURAIVAN'S SENRYU..
*
வலிமையான நட்புடன்
இரகசியங்கள் பாதுகாத்தார்கள்
உயிர்த் தோழிகள்.
*
மரணம் வரைக்கும் அழியாதது
நட்பின் தொடர்ச்சி
நினைவு அடுக்கின் பதிவுகள்.
ந.க. துறைவன் சென்ரியு.
*

புதன், 17 செப்டம்பர், 2014

நட்புடன்....!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
அறிமுகம் இல்லாதவரை
அறிமுகப் படுத்தினார்
அறிமுகமான நண்பர்.
*
பால்ய சினேகிதனிடம்
மனம் திறந்து சொன்னான்
மனசை அழுத்தும் பிரச்சினைகள்
*
துன்பத்தில் ஆறுதல்
இன்பத்தில் மகிழ்ச்சி
பகிர்ந்துக் கொண்டனர் நண்பர்கள்.
*
வலிமையான நட்புடன்
இரகசியங்கள் பாதுகாத்தார்கள்
உயிர்த் தோழிகள்.
*
மரணம் வரைக்கும் அழியாதது
நட்பின் தொடர்ச்சி
நினைவு அடுக்கின் பதிவுகள்.
*


செவ்வாய், 16 செப்டம்பர், 2014

விழிப்பு...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*

தாயைப் பார்த்ததும்
நொடிகளில் மறைந்தது
குழந்தையின் துக்கம்.
*
பறவைகள் குரல் கேட்டு
விழித்துக் கொண்டன
மரங்கள். 
*


பாசமாய்...!! [ சென்ரியு ]







*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
அப்பாவை விரும்புகிறாள் மகள்
அம்மாவை வெறுக்கிறான் மகன்
ஆதிக்கம் செய்கிறது உளவியல்.
*
எட்ட நின்று  பார்க்கும் குழந்தை
அம்மாவின் மடியில்
வளர்ப்புப் பூனை.
*
கணவனின் கோபத் தெரிப்பு
மனைவி அழுகிறாள்
அருகில் சிரிக்கிறது குழந்தை.
*
அடிக்க வரும் அம்மாவை
வெறுப்பேற்றுகிறான்
குறும்புக்காரப் பாச மகன்.
*
பெண்ணின் துயர மனமாய்
காற்றில் பறந்துக் காய்கிறது

கொடியில் துணிகள்.

சனி, 13 செப்டம்பர், 2014

வாத்துக்கள்...!! [ சென்ரியு ]


*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
மருத்துவ பயிற்சி முகாமுக்கு சென்று
இலவச பரிசோதனைச் செய்துக் கொண்டன
வயது முதிர்ந்த வாத்துக்கள்.
*
வீடு காலி செய்தபோது
கிடைத்தது பாட்டியின்
பாக்கு இடிக்கும் உரல்.
*
போக்குவரத்து மாற்றம்
திணறி தவிக்கின்றன
தெரு மாடுகள்.
ந.க. துறைவன் சென்ரியுகள்.
*

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

மழைநாள்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA THURAIVAN'S HAIKU.
*
மழையில் நனைந்து ஈரமாய்
சன்னலோரம் ஓதுங்கியது
சிட்டுக் குருவிகள்.
*
இன்றும் நினைவிலிருக்கிறது
இருவரும் தொப்பலாய் நனைந்த
அந்த மழை நாள்.
*
எங்கும் ஒரே மாதிரியாய்
பெய்வது ஒய்வதில்லை
பருவ மழை.
*


வியாழன், 11 செப்டம்பர், 2014

ஞானம்...!! [லிமரைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S LIMARAIKU.
*
மூதாதையர்க்குத் தெரிந்தது மண்கலம்
இளந் தலைமுறைக்குத் தெரிந்தது
விஞ்ஞானச் சாதனம் விண்கலம்.
*
வீதியில் ஒரே பரபரப்பு
சாதிக் கலவரம் சூழ்ந்த நகரம்
பீதியில் கடையடைப்பு.
*
மனிதருக்குப் பிடித்தது மதுபானம்
போதையிலே பிறந்தது சிலருக்கு
கவிதை மெய் ஞானம்.
- ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்

*

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

முன்னேற்றம்...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
கழுதைக்கு கல்யாணம் செய்கிறார்கள்
நாய்க்கு கல்யாணம் செய்கிறார்கள்
முற்போக்காக சிந்திக்கிறார்கள் மனிதர்கள்.
*
எந்த வேலையும் உருப்படியாகச் செய்யாமல்
அலைந்து அலைந்து எங்கும்
நிற்காமல் ஒடுகிறது நாய்கள்.
 *
வெளியில் போய் வரவே பயம்
அஞ்சுகிறான் மனிதன்
பாதுகாப்பாக இருக்கிறது நாய்கள்.
*
எப்பொழுது நடந்ததோ தெரியவில்லை
சம்பவம் யாரும் பார்க்கவி்ல்லை
பாதையில் நசுங்கிக் கிடந்தது நாய்.
*
மனிதர்கள் சைகையில் காட்டுகிறார்கள்
வாலையாட்டிக் காட்டுகின்றது நாய்கள்
அன்புடன் நன்றி.

*

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

மகிழ...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
வறண்ட நெல்வயல்கள் எங்கும்
குட்டைகள் இல்லை
தவளைகள் குதித்து மகிழ…!1

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

நிஜம்...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU,
*
வாழைப்பழத்தில்
நாற்று நட்டார்கள்
மணக்கும் ஊதுபத்திகள்.
*
சுற்றுச் சூழல் மாநாட்டில்
வாழ்உரிமைக்களுக்கான
கழுகுகளின் ஆவேச உரை
*
நிஜத்தைச் சொன்னான் நம்பவில்லை
பொய்யைச் சொன்னான்
எல்லோரும் பாராட்டினார்கள்.
*
எங்கோ வெறுப்போடுப் போனான்?
என்ன நடந்ததோ தெரியவில்லை
மகிழ்ச்சியோடு திரும்பினான் ஊர்.
*
ஆசையோடு கடைக்குப் போனார்கள்
கடைகள் மூடியிருந்தது திடீரெனக்
குழந்தைக்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
*


செவ்வாய், 2 செப்டம்பர், 2014

மிரட்டல்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
நிமிர்ந்து துணிந்து வாழும்
புல்லின் வாழ்க்கைக்கு
வியாக்கியானம் தேவையா?
*
இறப்புக் காலம் வரை
நினைவில் நிற்கின்றது
பிறந்த ஊரின் நினைவு.
*
இளமையை நினைவூட்டுகிறது
விளையாடிக் களித்தக்
கிராமத்தின் மாந்தோப்பு.
*
எப்பொழுதும் கேலி செய்வாள்?
தூக்கி மடியில் வைத்து
கொஞ்சி வளர்த்தப் பாட்டி.
*
பழம் பொறுக்கப் போனால்
மிரட்டி விரட்டுவார்கள்
நாகமரத்தில் முனீஸ்வரன்.
*



திங்கள், 1 செப்டம்பர், 2014

நம்பிக்கை...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
அரசமரத்தடியின் கீழ்
வரிசையாகயிருக்கின்றன
எண்ணெய்யில்லாத அகல்விளக்குகள்
*
ஏதோவொரு நம்பிக்கையில்
தினமும் நடந்தேறுகிறது
நம்பிக்கை இழந்தவன் வாழ்க்கை.
*
தேடுகின்றவனுக்கு கிடைக்கவில்லை
தேடாமல் நினைத்திருப்பவனுக்கு
தேடாமல் கிடைக்கிறது மெஞ்ஞானம்.
*   


வெளியேற்றம்....!! [ ஹைக்கூ ]

*
NA. GA. THURAIVAN'S HAIKU. 
*
பகையுணர்ச்சி நெஞ்சில்
எப்படி புகுந்தது?
மாம்பழத்தின் உள்ளே வண்டு.
*
கிராமத்துப் பெண்களின்
சிறுத்த இடையில்
நீரில்லாத காலிக் குடம்.
*
காட்டில் வாழப் பிடிக்காமல்
வெளியேறி ஊருக்குள்
புகுந்து விட்டன சிறுத்தைகள்

*

சனி, 30 ஆகஸ்ட், 2014

புரியாமல்....!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
புரிந்துக் கொண்டிருப்பாய் என
நினைத்தேன் எப்படியின்னும்
புரிந்துக்கொள்ளாமல் அனிச்சப்பூவே…!!
*
புரிந்துக் கொள்வது கடினம்
புரியாமலிருப்பது எளிது
கவலைப்படாமல் போகிறது சிட்டு.
*
புரிந்தால் தலைக் கவிழும்
புன்னகைப் புரியும் உதடுகள்
உரசி எம்பிப் பறக்கிறது தும்பிகள்.
*   

குழப்பமாய்...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
மனம் எங்கெங்கோ வெளியில்
உள்ளே கனன்றெரிகிறது
சொல்ல முடியாத குழப்பம்.
*
யாரோ விதைத்தக் குழப்பம்
குழம்பித் தவிக்கிறது மனம்
குழப்பம் விழுப்பம் தரலாம்
*
வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
குழம்பிய குட்டையில்
நிறைய நெளிகிறது மீன்கள்.

*

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வரவேற்பு...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
ஒன்றை ஒன்று மோதாமல்
குறித்தப் பாதையில்
பயணிக்கின்றன பறவைகள்.
*
வாசல்கேட்டில் அமர்ந்து
கத்திக்கத்தி ஏதோவொரு
தகவலைச் சொல்கிறது காக்கை.
*
வெளிநாட்டிலிருந்து வருகிறான் மகன்
உறவினர்களோடு பயணித்தது
வரவேற்க செல்ல நாய்க்குட்டி.
- ந.க. துறைவன் சென்ரியு கவிதை.
*

  

புதன், 27 ஆகஸ்ட், 2014

ஜல்லிக்கட்டு...!! [ லிமரைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S LIMARAIKU.
*
எல்லோர் கையில் இருக்கணும் காசு
மனம் கலகலப்பாக்க வேண்டுமானால்
சிரிக்க சிரிக்க நீ பேசு.
*
கைகால் முறிந்தது காயம்பட்டு
தமிழரின் வீரவிளையாட்டு பார்க்கலாம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.
*
சமையலறையில் இருந்துக் கேட்டது ஓசை
சுகந்தமணமனமாய் நாசிக்குள் நுழைந்தது
அம்மா சுட்டுக் கொண்டிருந்தத் தோசை.
*
சின்னத்திரைத் தொடரில் பரபரப்பு
திடீரென மின்தடை
மாமியார் முகத்தில் புன்சிரிப்பு.
*
திருமணவிருந்தில் ருசித்துண்டான் பாயாசம்
உறவினர்கனளுடன் கலந்துப் பேசி மகிழ்ந்தவன்
கண்கள் சொருகியது தூக்கமாய் ஆயாசம்.
*


திங்கள், 25 ஆகஸ்ட், 2014

பசுமை தங்கம்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
ஏகாந்த வெளியில் பறந்துத் திரியும்
பறவைக்குத் தெரியுமா?
பால்வெளியின் ரகசியம்.
*
முதல் வாஸ்து விஞ்ஞானி
தென்னாட்டுக் கலைஞன்
சிற்பி மயன்.
*
வீட்டிற்கு அழகு செய்கிறது
காட்டின் பசுமைத் தங்கம்
தேவதாரு மரங்கள்.
*
வீட்டில் யாருமில்லை
விளையாடுகிறது ஏறிஇறங்கி
ஊஞ்சலில் எலிகள்.
*
வெளிநாட்டில் கணவன்
உள்நாட்டில் மனைவி
உறவை இணைக்கிறது செல்போன்.
*


வண்டுகள்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
பூமியின் இரகசியங்கள்
புலன்களால் உணர்ந்திடும்
மண்வளம் புரிந்த வண்டுகள்.
*
பொன் வண்டின் உலகப்
பொதுமொழி
இன்னிசை கீதம் “ ரீங்காரம் ”.
*
சைவமா? அசைவமா? சொல்
வீட்டிற்குள் வந்த என்
விருந்தாளி வண்டே…!!
*
உறங்கும் குழந்தையை
எதற்காகக் கடித்தாய்?
வண்டின் வன்குணம்.
*
பயிருக்கு உரம் போட
மலஉருண்டை
உருட்டி வரும் வண்டுகள்.
*