செவ்வாய், 15 அக்டோபர், 2019

ரீங்காரம்

மார்கழி – 23.
*
தூங்கும் பூக்களின்
உறக்கம் களைத்தெழுப்புவிறது
பொன்வண்டின் ரீங்காரம்..
*
மார்கழி – 24.
*
முற்றிய நெற்கதிர்கள்
பனிநீரின் பாரத்தால்
சிரம் தாழ்த்தி மண் வணங்கும்.

சிவன்

நுங்கில் மூன்று கண்கள்
தேங்காயில் மூன்று கண்கள்

ந க துறைவன்.

சிவன் நெற்றியில் .

வியாழன், 10 அக்டோபர், 2019

நாய்

மரத்தின் கீழ் நாய் அதன் மேல் உதிர்ந்திருக்கிறது மஞ்சள்நிறக் குழல் பூக்கள். The dead dog Under the tree Has yellow flowers on it. Thuraivan NG

வியாழன், 3 அக்டோபர், 2019

உச்சியில் நிலா...!!

1. எனக்கு ஹைக்கூ தெரியாது? ஹைக்கூ புரிய முயற்சிக்கிறேன் மலைமுகட்டின் உச்சியில் நிலா. 2. ஹைக்கூ படிக்கிறேன் அவ்வப்போது புரியவே மாட்டேங்கிறது தலையில் குட்டினார் பாஷோ. 3. எது சிறந்த ஹைக்கூ? சொல்லத் தெரியவில்லை மலையின் மௌனம். 4. எந்த ஹைக்கூ போட்டியிலும் வெற்றி பெறவில்லை? சான்றிதழ் இல்லை. ஜீவிக்கிறது என்னுள் ஜென்ஹைக்கூ. 5. பாஷோ, பூசன், ஷிகி, இஸ்ஸா யாரையும் எனக்குத் தெரியாது? என்னையே தெரியவில்லை இன்னும்... 6. மகாகாஸ்யபர் கையில் விரிந்த மலர் மணம் வீசி பரவியது உலகில் ஜென். 7. பாஷோவைச் சுமந்து திரிகின்றன வண்ணத்துப்பூச்சிகள் உலகெங்கும் பறந்து பறந்து. 8. தோளில் ஒத்த செருப்பு, துணிமூட்டை பித்தனாக நடக்கிறான் இன்னும் அரூபமாய் போதி தர்மன். 9. வாத்து வெளியே வந்துவிட்டது காற்று விடுதலைப் பெற்றது உள்ளேசூன்ய ஹைக்கூ. 10. கோடானகோடி ஹைக்கூக்களுடன் சர்ச்சை இல்லாமல் ஒரு தோழி படிக்காத நிலா. 11. உதிர்ந்த பசுமை இலைகள் ஹைக்கூவின் உன்னதம் பொன்னிற காய்ந்த சருகுகள். ந க துறைவன்.

சனி, 28 செப்டம்பர், 2019

விசாரிப்பு

என்னைப் பார்த்தவர் நலம் விசாரித்தார் நானும் விசாரித்தேன் திருப்தியாய் பிரகாசமற்ற முகத்தில் வியர்வைத்துளிகள். ந க துறைவன்.

வியாழன், 12 செப்டம்பர், 2019

புத்தன்

1. காற்றின் தழுவல் உணர்வு உதிர்ந்த இலைகள் சத்தம் தியானம் கலையாத புத்தன். 2. அரை இருட்டு உள்ளே விழித்திருக்கும் அகல்விளக்கு புத்தன் அருகில் ஒளி. 3. புத்தனா? அத்திவரதனா? குழப்பத்தில் பக்தர்கள் நெரிசலில் சர்வதரிசனம். 4. உடல் ஓய்வெடுக்கிறதா? அசைவின்றி சாய்ந்து உறக்கம் விழிப்புணர்வில் புத்தன். 5. பூமிக்கு இறங்கி வந்து கிரிவலம் வேடிக்கைப் பார்க்கிறது மலை உச்சியில் நிலா. 6. பிச்சை பாத்திரம் கையில் பசிக்கு உணவு கிடைக்குமாவென துறவியைத் தொடரும் நாய். 7. குகையில் ஆழ்ந்த அமைதி தியான அதிர்வலைகள் வெளியே பௌர்ணமி ஓளி. 8. மறைந்தது நிலவு சிலநொடிகள் இருள் முழு சந்திர கிரகணம். 9. புத்தனை ஏற்றாள் மனைவி புத்தனை ஏற்றான் மகன் சித்தார்த்தனைத் துறந்தார்கள். 10. பதிந்த காலடிச் சுவடுகள் பின்தொடரும் ஆனந்தன் புத்தனின் பின்நிழல். 11. பாதையெங்கும் இருட்டு அரூபம் கடந்து போகிறது அருகில் மர இலைகள் சலசலப்பு. 12. விழிகளுக்குள் உலகம் விரல்நுனியில் வெளி சும்மா இருக்கும் மௌனம். ந க துறைவன்.

திங்கள், 2 செப்டம்பர், 2019

வெண்டை பரல்கள்.

1. வெளிச்சமற்ற அறைக்குள் என்ன செய்கிறது மறைவாய் வலியில் பிரசவமான பூனை. 2. விரல்களென நீண்ட காய்கள் வெடித்து உதிர்ந்தன தரையில் முதிர்ந்த வெண்டை பரல்கள். 3. சந்தர்ப்பம் தேடி பின்தொடர்ந்து பெண்குறி முகர்ந்து பார்க்கும் கலவிக்கு முன் நாய். 4. நானும் அவளும் துண்டிக்கப்பட்டுள்ள இணைப்பின் தொடர்பு எல்லைக்கு அப்பால். 5. அழுகுரல் ஒலி கேட்டு துக்கம் விசாரிக்கப் போகிறது கூடவே அன்போடு நாய். 6. ஆத்தாளுக்குப் பிடிக்கும் ஆரோக்கியத்திற்கு பிடிக்கும் சுவையான ஆடிக் கூழ். 7. எதையோ பார்த்து மிரண்டு கயிறறுத்து கோபமாய் ஓடுகிறது மரத்தில் கட்டிய மாடு. 8. அழகாய் சேர்த்து கட்டியது பிச்சி பிச்சி எறிகிறது குரங்கு கையில் பூமாலை. 9. மடை திறந்ததும் சீராக வயலுக்கு பாய்கிறது நீர் அலகால் அருந்துகிறது குருவி. 10. ஏதோ நடக்கப் போகிறதென்று ஆழ்ந்த யோசனையில் தீவிரமாய் இடம் பெயர்ந்தது பூனை. 11. குவிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் மீது படுத்து ஓய்வெடுக்கிறது அலைந்து ஓய்ந்த தெருநாய். 12. இரவு அமைதி கிளிகள் மௌனம் இலைகள் இசை. 13. என்ன பிரச்சனையோ? பிரார்த்தனை யோ? அம்பாளை நெட் சுத்தி சுத்தி வலம் வருது. 14. கொழுக்கட்டையில் பதிந்திருக்கிறது அவள் கைவிரல் ரேகைகள். 15. வெள்ள அபாய எச்சரிக்கை கரையோரம் கிராமங்களுக்கு அடித்து அறிவிக்கிறது தண்டோரா. 16. தேரில் வலம் வந்தாள் மக்கள் பார்த்து பரவசம் வேப்பிலைக்காரிக்கு சந்தோஷம். 17. அம்பாள் பேசவில்லை பூசாரி பேசினான் நிறைய குறி கேட்ட பெண்கள் முகம் மாறின. 18. குளிரான மழை நாள் மனம் சூடேற விரும்பி பாரில் குடித்தான் பீர். 19. மனவனத்தில் எவரும் நுழைய அனுமதியில்லை உள்ளே பூச்சிகள் இரைச்சல். 20. எத்தனை நாளாச்சு? உடலுறவு காணாமல் சுருட்டிய பாய் மூலையில். 21. கவ்வி பிடித்தது எலியை வேகமாய் பாய்ந்து சுவரேறி குதித்து பூனை. 22. கூர் பார்வைப் பதித்து ஏதோவொரு தேடலில் உன் கருவண்டு விழிகள் நிலைத்து. 23. மதில்சுவர் தாண்டி தாண்டி பயிற்சி எடுக்கின்றன சிலநாளாய் அழகான குட்டி அணில்கள். 24. உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசு வென்றது கறுப்பு பூனை. ந க துறைவன்.