வெள்ளி, 7 மார்ச், 2014

அசடு வழி

   * முழு நிர்வாணமாய் நின்று
     அழுதுக் கொண்டிருக்கிறது 
     தெருவில் ஓரு குழந்தை.
.
    *முத்தமிடுவதற்கு     
     தடையாக இருக்கிறதென்று
     வெட்டிவிட்டான் மீசை.

    *எலிகளின் நடமாட்டம்
     கண்காணிக்கிறது                     
     தூங்கும் பாவனையில் பூனை.

.    *தோட்டாக்கள் இல்லாத
தூப்பாக்கி இயக்கி
பயிற்சி எடுக்கிறான் சிறுவன்

*காரியத்தை ஓப்படைத்தார்கள்
பொறுப்பானவன் என்று
வந்து நின்றான் அசடு வழி…
*
ஆக்கின்ஸில் இருந்தது
ஆக்கின்சோடு போனது
குழந்தை கழித்த மலம்.

*

புதன், 5 மார்ச், 2014

வழி தெரியாம

மலைப் பாதையில் நடந்தான்
பெயர் சொல்லி குரல் கொடுத்தான்
எதிரொலித்தது அப் பெயர்.
*
நதியில் கால் வைத்தான்
நனைந்தக் கால்களில்
முத்தமிட்டுச் சென்றன மீன்கள்.
*
வழி கேட்டு நட்க்கிறான்
மீண்டும் வழி கேட்டு நடக்கிறான்
வழி தெரியாமல்…


செவ்வாய், 4 மார்ச், 2014

யாரோ ஓருத்தி


*
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.

*
தொ.லைவில் தெரிந்தது
யாரென்று தெரியவில்லை
தெளிந்த வானம்.
*
வாழ்க்கையை வெறுத்தான்
பிறகு மறுத்தான் இப்பொழுது

வாழ நினைக்கிறான் தெளிவாய்….

திங்கள், 3 மார்ச், 2014

ஞானி

ந.க துறைவன் ஹைபுன் கவிதை
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இறந்த செய்தி
மன அதிர்ச்சியைத் தந்தது. அவர் ஆற்ற வேண்டிய
பணிகள் குவிந்துக் கிடைக்கும் போது, அவரின் திடீர்
மரணம் இயற்கைச் சுற்றுச் சூழல் இயக்கத்திற்குப்
பேரிழப்பாகும். மரம்,செடிகள் மனமிரங்கி அழுதன.
வரப்பில் வரும்போதே வயல்களில் நிற்கும் நெற்
பயிர்கள் தலைத் தாழ்த்தி வணங்கும். அவைகள்
இன்று தலை குனிந்து அஞ்சலி செய்தன. மண்ணை
நஞ்சாக்கும். செயற்கை உரங்களை எதிர்த்துப்
போராடியதற்காக, வளமான விவசாய நிலங்கள்
விம்மி அழுது நன்றி சொல்லின. அவரைப் பார்த்து
புன்னகைக்கும் பூக்களெல்லாம், அவரின் மென்மையான
உடலில் படர்ந்துப் போர்த்தி அஞ்சலி செய்தன.

மரணிக்க வில்லை
மண்ணின் நெஞ்சில் வாழ்கிறார்
மண்ணை நேசித்த {விஞ்} ஞானி.


*சிற்றிதழ் அறிமுகம்

                               
மின்மினி-ஹைக்கூ காலாண்டிதழ்
எண்:21-22- 2013-2014.
விலை. ரூபாய்.15/--                
முகவரி
ஆசிரியர்
 கன்னிக் கோயில் இராஜா,
30/8, கன்னிக் கோயில் முதல் தெரு,
அபிராம புரம், சென்னை-600 018.
பக்கத்திற்குப் பக்கம் ஹைக்கூ கவிதைகளும்
ஆங்கில/தெலுங்கு மொழி பெயர்ப்பு கவிதைகளும்
ஹைபுன் கட்டுரையும் மற்றும் பல தகவல்களோடு
வெளிவந்துள்ளன. படித்து ரசியுங்கள்

ந.க.துறைவன்.

நூல் அறிமுகம்.

நூல் அறிமுகம்.
*
கவியருவி. ம.இரமேஷ்-சின்
இரு நூல்கள்.
1.பனித் துளியில் பனைமரம்- ஹைக்கூ
     வெளியீடு: டிசம்பர்-2013.                         
விலை.ரூபாய்.150/-
2.ஓராயிரம் சென்ரியு-சென்ரியு
     வெளியீடு: டிசம்பர்-2013
விலை.ரூபாய்.150/-
                                                                3.கிடைக்குமிடம்:
1.அன்பு நிலையம்
11 புண்ணிய கோட்டி நகர்  
சலவன் பேட்டை,வேலூர்-632 001.
2.கவியருவி ம.இரமேஷ்                    
19,கணபதி நகர், தொரப்பாடி அஞ்சல்,
     வேலூர்-632 002.
இயற்கை சார்ந்தும் சமூகம் சார்ந்ததுமானப் படைப்புகளைக்
கொண்டு வெளி வந்துள்ளன.
                    

    
                     







    

    



கிறுக்கல்கள்

கவியருவி ம.இரமே’ஷ் சென்ரியு கவிதைகள்
*
குழந்தையின் கிறுக்கல்கள்
புரியாமல் வியக்கும்
குப்பை கிளறும் கோழி.
*
எச்சில் இலை எடுக்க
தடுத்து நிறுத்தப்பட்டது
அவர்களுக்கும் ஒரு பந்தி.

செய்தி வந்ததும்
தொலைக்காட்சி அணைப்பு
சமையல் நேரம்.
*
நதிக் கரையில்
சந்தித்துக் கொண்டன                                        
நீர்த் தேடி வந்த கொக்குகள்
*
கண்ணைப் பார்த்துப் பேசு
சாத்திய மில்லை
எப்போதும் காதலர்க்கு
*
ஆதாரம்:- கவியருவி ம.இரமேஷ்-சின்
“ஓராயிரம் சென்ரியு-என்ற தொகுப்பிலிருந்து.