புதன், 6 ஜனவரி, 2016

கருணை...!! ( ஹைக்கூ )

மார்கழி – 43
மலைப்பாதைச் சுற்றும் பக்தர்கள்
வேடிக்கைப் பார்க்கின்றது
மார்கழி பௌர்ணமி நிலா.
*                                          
மார்கழி – 44.
கன்னியர்கள் பிரார்த்தனைக்கு
கருணை செய்வாளா?
கல்யாணக் காமாட்சி.

*

செவ்வாய், 5 ஜனவரி, 2016

கருவண்டுட...!! ( ஹைக்கூ )

மார்கழி – 41.
*
காஞ்சியில் ஆட்சி புரிபவளே
காமாட்சி உன் கையில்
செங்கரும்பு செங்கோலே பேரழகு.
*
மார்கழி – 42.
*
காமனை எரித்தான் சிவன்
சாந்தம் அடைந்தாயோ?
கருவண்டு விழியாளே காமாட்ச

*

திங்கள், 4 ஜனவரி, 2016

கிளியழகு...!! ( ஹைக்கூ ீ

மார்கழி -39.
*
எதற்காக வெட்டவெளி பாதையில்
பனியில் நின்றிருக்கிறாய்?
சளி பிடிக்கப் போகிறது ஆஞ்சநேயா!!
*
மார்கழி  40.
*
சொக்கனுக்கு மணவாட்டி
சொக்க வைக்குதடி மீனாட்சி
உன் தோளில் கிளியழகு.

*

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அழகின் உறவு...!!! ( ஹைபுன் )


*
அழகின் உறவு…!!
*
இலையுதிர்காலத்தில் மரங்களிலிருந்து பசுமையான பொன்னிறமான இலைகள் அழகிய வண்ணங்களில் வாழ்வை அனுபவித்து விட்டு உதிர்ந்துவிடுவது எவ்வளவு அழகானது. அவ் வசந்தக்காலப் பூக்களின் நறுமணம் காற்றில் கலந்து எத்தனை ரம்மியமான சூழலை உருவாக்கி விடுகிறது? கீழே உதிரும் இலைகள் காற்றில் உருண்டு உருண்டு செல்வதைப் பார்க்கப் பார்க்க எத்தனை ஆசைக் கொள்கிறது மனம்?. பூக்கள் காய்கள் புழு பூச்சி எறும்புகளுக்கு நித்தம்  சுவையான இலவச உணவாகின்றன. பறவையினங்கள் இயற்கையின் எழில்கொஞ்சும் அழகின் உறவில் வாழ்நாளை இனிமையாக  வாழ்ந்து மகிழ்ந்து கழிக்கின்றன.
*
இயற்கைச் சூழல் கேடு
மனிதன் இழைக்கும் கொடுமை
எதிர்கொள்கின்றன பறவைகள்.

*

பூமலைகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 37.
*
எந்த ஆண்டவனை, ஆசாமிகளை
அலங்கரிப்போமென்று பனியில்
ஈரமாய் தொங்கும் பூமாலைகள்.
*

மார்கழி – 38.
*
பனிக்குளிரில் எரியும் நெய்விளக்கு
நோ்த்தி கடன் செய்வார்கள்
கல்யாணம் வரம்கேட்டு கன்னியர்கள்

*               

சனி, 2 ஜனவரி, 2016

பூசணிப்பூ...!!( ஹைக்கூ )

மார்கழி – 35
*
பூ காய்கறி வாழையென
சுமந்து நகர்வந்த தாய்மாரின்
உழைப்பை உணர்வாயோ கோவிந்தா!!
*
மார்கழி – 36
*
உள்வீட்டில் உட்பூசல்கள்
வெளிப்புறத்துக் கொல்லையிலே
மங்கலமாய் பூத்திருக்குப் பூசணிப்பூ.
*

வெள்ளி, 1 ஜனவரி, 2016

பசு...!! ( ஹைக்கூ )

*
மார்கழி – 33
*
அசைப்போட்டு நின்றிருக்கும் பசு
கன்று பின் துள்ளி நிற்கும்
மடிபிடித்து கறப்பான் பால்காரன்.
*
மார்கழி – 34.
*                                                
ஈர வைக்கோல்கள்
தவிட்டு நீருண்டு
பசிதீர்க்கும் ஆவினங்கள்.

*