*
அழகின் உறவு…!!
*
இலையுதிர்காலத்தில்
மரங்களிலிருந்து பசுமையான பொன்னிறமான இலைகள் அழகிய வண்ணங்களில் வாழ்வை அனுபவித்து விட்டு
உதிர்ந்துவிடுவது எவ்வளவு அழகானது. அவ் வசந்தக்காலப் பூக்களின் நறுமணம் காற்றில் கலந்து
எத்தனை ரம்மியமான சூழலை உருவாக்கி விடுகிறது? கீழே உதிரும் இலைகள் காற்றில் உருண்டு
உருண்டு செல்வதைப் பார்க்கப் பார்க்க எத்தனை ஆசைக் கொள்கிறது மனம்?. பூக்கள் காய்கள்
புழு பூச்சி எறும்புகளுக்கு நித்தம் சுவையான
இலவச உணவாகின்றன. பறவையினங்கள் இயற்கையின் எழில்கொஞ்சும் அழகின் உறவில் வாழ்நாளை இனிமையாக
வாழ்ந்து மகிழ்ந்து கழிக்கின்றன.
*
இயற்கைச் சூழல்
கேடு
மனிதன் இழைக்கும்
கொடுமை
எதிர்கொள்கின்றன
பறவைகள்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக