மார்கழி – 47.
தொப்பை விநாயகரைச்
சுமந்து
பனியில் நனைந்து
போகிறது
சிரித்துக் கொண்டே
சுண்டெலி.
*
மார்கழி – 48.
வீபூதி குங்குமம்
பனியில் கரைந்து
அசுத்தமாக்கி விட்டன
கல்தூண்களின் சிலையழகு.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக